சுசுரீ திபியதர்சினி பிரதான்

சுசுரீ திபியதர்சினி பிரதான் (Sushree Dibyadarshini) ஓர் இந்திய துடுப்பாட்ட வீராங்கனை ஆவார். 1997 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 8 அன்று இந்தியாவின் ஒடிசா மாநிலத்திலுள்ள தெங்கனல் கிராமத்தில் இவர் பிறந்தார். வலது கை சுழல் பந்து வீச்சாளராகவும் மட்டையாளராகவும் விளையாடி வருகிறார்.[1] ஒடிசா அணிக்காகவும் வெலாசிட்டி அணிக்காகவும் திபியதர்சினி ஆடுகிறார்.

சுசுரீ திபியதர்சினி
Sushree Dibyadarshini
Sushree Dibyadarshini.jpg
துடுப்பாட்ட வீராங்கனை
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்சுசுரீ திபியதர்சினி பிரதான்
பிறப்பு8 செப்டம்பர் 1997 (1997-09-08) (அகவை 24)
தெங்கனல், ஒடிசா, இந்தியா
மட்டையாட்ட நடைவலது கை
பந்துவீச்சு நடைவலது கை எதிர்ச்சுழல்
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
ஒடிசா பெண்கள் துடுப்பாட்ட அணி
2019–முதல்வெலாசிட்டி
மூலம்: ESPNcricinfo, 11 சனவரி 2021

2011/2012 ஆண்டு காலத்தில் 19 வயதுக்குட்பட்டோருக்கான ஒடிசா அணியில் விளையாடி வந்த இவர் 2012 ஆம் ஆண்டில் அசாம் அணிக்கு எதிராக முழுமையாக களம் இறங்கினார். இப்போட்டியில் 9 ஓட்டங்கள் எடுத்து ஒரு விக்கட்டை வீழ்த்தினார்.[2] இதன் பின்னர் ஒடிசா அணியின் நிரந்தர ஆட்டக்காரராகவும் 2014 ஆம் ஆண்டு முதல் இந்திய ஏ அணியில் விளையாடவும் ஆரம்பித்தார்.[3]

அரியானா அணிக்கு எதிரான போட்டியில் 43 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 5 விக்கட்டுகளை வீழ்த்தியது திபியதர்சினியின் சிறந்த பந்துவீச்சாக கருதப்படுகிறது.[4] கிழக்கு மண்டல அணிக்காவும் இந்திய பச்சை அணிக்காவும் திபியதர்சினி விளையாடுகிறார்.[3]

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் மகளிர் 20/20 சேலஞ்சர் வெலோசிட்டி துடுப்பாட்ட அணியில் விளையாட கிரிக்கெட் உரிமையாளர் அணிக்காக விளையாட திபியதர்சினி தேர்வு செய்யப்பட்டார். ஒரு போட்டியில் விளையாடி மேற்கு இந்திய தீவுகள் அணியின் சிடப்பானி டெய்லரை ஆட்டமிழக்கச் செய்தார்.[5]. 2020 ஆம் ஆண்டுக்கான 20/20 போட்டிக்கான வெலாசிட்டி அணியில் திபியதர்சினி மீண்டும் தேர்ந்தெடூக்கப்பட்டார். மீண்டும் ஓர் ஆட்டத்தில் விளையாடினார்.[6]

மேற்கோள்கள்தொகு

  1. "Sushree Dibyadarshini". Cricinfo. 2021-02-14 அன்று பார்க்கப்பட்டது.
  2. "Assam Women v Orissa Women, 4 November 2012". Cricket Archive. 11 January 2021 அன்று பார்க்கப்பட்டது.
  3. 3.0 3.1 "SN Pradhan Profile". Cricket Archive. 11 January 2021 அன்று பார்க்கப்பட்டது.
  4. "Haryana Women v Orissa Women, 8 March 2020". Cricket Archive. 11 January 2021 அன்று பார்க்கப்பட்டது.
  5. "Trailblazers v Velocity, 8 May 2019". Cricket Archive. 11 January 2021 அன்று பார்க்கப்பட்டது.<nowiki>
  6. "Trailblazers v Velocity, 5 November 2020". Cricket Archive. 11 January 2021 அன்று பார்க்கப்பட்டது.

புற இணைப்புகள்தொகு