சுஜாதா சாகு

சுஜாதா சாகு (Sujata Sahu) ஒரு இந்தியச் சமூகத் தொழில்முனைவோர் ஆவார். ஆசிரியராக பணிபுரிந்த இவர், லடாக்கிலுள்ள தொலைதூர கிராமங்களில் பள்ளி நிலைமைகளை மேம்படுத்துவதற்காக "17000 அடி அறக்கட்டளை" என்ற தொண்டு நிறுவனத்தை அமைத்தார். இந்த அரசு சார்பற்ற அமைப்பு பள்ளிகளுக்கு புத்தகங்கள் மற்றும் விளையாட்டு மைதானங்களை வழங்கியும், தன்னார்வ ஆசிரியர்களை ஏற்பாடும் செய்துள்ளது. இவரது இந்தப் பணியை அங்கீகரிக்கும் விதமாக 2015இல் நாரி சக்தி விருது வழங்கப்பட்டது.

சுஜாதா சாகு
தேசியம் இந்தியா
பணிஆசிரியரான இவர் தொண்டு ஊழியராக மாறினார்
அறியப்படுவதுலடாக் பிராந்தியத்தில் பள்ளிப்படிப்பை ஆதரிப்பது
வாழ்க்கைத்
துணை
சந்தீப் சாகு

தொழில் தொகு

இவர் குருகிராம் செல்வதற்கு முன்பு ஒன்பது ஆண்டுகள் அமெரிக்காவில் பணியாற்றினார். புதுதில்லியிலுள்ள ஸ்ரீ ராம் பள்ளியில் ஆசிரியராகவும் இருந்தார். அங்கு கணிதம் மற்றும் கணினி அறிவியல் கற்பித்தார்.[1][2][3] சூன் 2010 இல், இவர் லடாக்கில் ஒரு தனி மலையேற்றத்திற்குச் செல்லும்போது சுவாசப் பிரச்சனைய எதிர்கொண்டார்.[3] அங்குள்ள நிலைமைகளைக் கண்ட இவர், உள்ளூர் பள்ளி குழந்தைகளுக்கு மேம்பட்ட வசதிகளை வழங்க அரசு சார்பற்ற அமைப்பு ஒன்றை (என்ஜிஓ) அமைக்க முடிவு செய்தார். [1]

17000 அடி உயர அறக்கட்டளை தொகு

2011 இல், சாகு தனது கணவர் சந்தீப் சாகு மற்றும் தாவா ஜோரா ஆகியோருடன் 17000 அடி உயரத்தில் ஒரு அறக்கட்டளையை அமைத்தார்.[1] கடல் மட்டத்திலிருந்து 17,000 அடி உயரத்தை எட்டிய ஒரு மலையேற்றத்திற்கு இவர்கள் தொண்டு நிறுவனத்திற்கு 17,000 அடி அறக்கட்டளை எனப் பெயரிட்டனர். தன்னார்வலர்களால் நடத்தப்பட்ட ஒரு ஆய்வை மேற்கொண்ட இவர்கள் லடாக் முழுவதும் 600 பள்ளிகளை அடையாளம் கண்டனர். இந்த அறக்கட்டளை 140 பள்ளிகளுக்கு விளையாட்டு மைதானங்களை வழங்கியுள்ளது. 230 பள்ளிகளுக்கு நூலகங்களை நன்கொடையாக வழங்கியுள்ளது. இந்து, ஆங்கிலம் மற்றும் உருது மொழிகளில் புத்தகங்களையும் வழங்கியுள்ளது. லடாக்கி மொழியான போடியில் எந்த புத்தகங்களும் இல்லாததால், 2015ஆம் ஆண்டில் அறக்கட்டளை மொழிபெயர்ப்புகளுக்கு நிதியளித்து 21,000 கதைப்புத்தகங்களை வழங்கியது.[1] 2013ஆம் ஆண்டில், அறக்கட்டளை தன்னார்வத் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் தன்னார்வ ஆசிரியர்கள் பள்ளிகளுடன் பொருந்தி பணிபுறிகிறார்கள்.[4] தன்னார்வலர்கள் ஒருவர் ஆண்டுக்கு ஒரு பள்ளியில் மட்டுமே பணிபுரிவார் [5]

விருது தொகு

தனது சமூக தொழில்முனைவுக்காக இவர் 2015 நாரி சக்தி விருதைப் பெற்றார். [2] 2019 ஆம் ஆண்டில், நிதி ஆயோக்கால் இந்தியாவை மாற்றும் பெண்கள் எனக் கௌரவிக்கப்பட்டார்.[2]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 1.2 1.3 Chakrabarty, Roshni (21 December 2018). "This Iron Lady's haunting Ladakh trek is helping her transform govt schools at 17000 ft" (in en). India Today இம் மூலத்தில் இருந்து 12 January 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210112143219/https://www.indiatoday.in/education-today/how-i-made-it/story/iron-lady-sujata-sahu-transforming-ladakh-mountain-schools-html-1414511-2018-12-21. 
  2. 2.0 2.1 2.2 Joshi, Komal (24 July 2020). "Making Education and Technology Reach the Remote Villages of Ladakh". The Stories Of Change. பார்க்கப்பட்ட நாள் 10 January 2021.
  3. 3.0 3.1 Pais, Nichola. "Sujata Sahu: Transforming lives of thousands of children in remote Ladakh" (in en). Scoo News இம் மூலத்தில் இருந்து 12 January 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210112143341/https://www.scoonews.com/news/sujata-sahu-transforming-lives-of-thousands-of-children-in-remote-ladakh-1847. 
  4. Burman, Partho (8 November 2014). "A teacher treks to a high altitude desert, only to reach out to underprivileged students" (in en). The Weekend Leader இம் மூலத்தில் இருந்து 12 January 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210112143231/https://www.theweekendleader.com/Heroism/2038/height-of-concern.html. 
  5. Ramesh, Rashmi (19 May 2018). "Take a break, opt for some 'me-time': Brilliant options to make solo travel a dream". The Economic Times இம் மூலத்தில் இருந்து 12 January 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210112143245/https://economictimes.indiatimes.com/magazines/panache/take-a-break-opt-for-some-me-time-brilliant-options-to-make-solo-travel-a-dream/articleshow/64230836.cms. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுஜாதா_சாகு&oldid=3400308" இலிருந்து மீள்விக்கப்பட்டது