நாரி சக்தி விருது

சிறந்து விளங்கும் பெண்களுக்கு வழங்கப்படும் விருது

நாரி சக்தி விருது (Nari Shakti Puraskar) ("பெண் சக்தி விருது") என்பது இந்திய அரசாங்கத்தின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் ஆண்டுதோறும் வழங்கும் விருதாகும்.[1] இந்த விருதுகளை அனைத்துலக பெண்கள் நாள் அன்று (மார்ச் 8) புது தில்லியிலுள்ள குடியரசுத் தலைவர் இல்லத்தில் இந்தியக் குடியரசுத் தலைவரால் வழங்கப்படுகிறது. இந்த விருதுகள் 1999இல் ஸ்த்ரீ சக்தி புரஸ்கார் என்ற தலைப்பில் நிறுவப்பட்டு 2015ஆம் ஆண்டில் மறுபெயரிடப்பட்டு மறுசீரமைக்கப்பட்டன. ஆறு நிறுவனப் பிரிவுகளிலும் இரண்டு தனிப்பட்ட பிரிவுகளிலும் விருதுகள் கொடுக்கப்படுகின்றன. இவை முறையே இரண்டு இலட்சம் மற்றும் ஒரு இலட்சம் இந்திய ரூபாய் ரொக்கப் பரிசைக் கொண்டுள்ளன.[2]

நாரி சக்தி விருது
Shri Ram Nath Kovind presenting the Nari Shakti Puruskar for the year 2019.jpg
2019இல் விருது பெற்றவர்களுடன் குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த்
விருது வழங்குவதற்கான காரணம்பெண்கள் அதிகாரம் பெறுவதற்கான விதிவிலக்கான பணிகளை அங்கீகரிக்கும் வகையில் தேசிய விருது
இதை வழங்குவோர்பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம், இந்திய அரசு
முன்பு அழைக்கப்பட்டது பெயர்ஸ்திரீ சக்தி புரஸ்கார்
வெகுமதி(கள்) 1-2 இலட்சம்
முதலில் வழங்கப்பட்டது1999
இணையதளம்Nari Shakti Puraskar

வகைகள்தொகு

 
இந்தியக் குடியரசுத் தலைவர் பிரணப் முகர்ஜி 2012 தில்லி கும்பல்-வல்லுறவுக்கு ஆளான நிர்பயாவின் மரணத்திற்குப் பின் 2012இல் ராணி இலட்சுமிபாய் ஸ்த்ரீ சக்தி புரஸ்காரை வழங்குகிறார்.[3][4]

நாரி சக்தி விருதுகள் ஆறு நிறுவனப் பிரிவுகளிலும், தனிப்பட்ட பெண்களுக்கு இரண்டு பிரிவுகளிலும் வழங்கப்படுகிறது. [1]

நிறுவனப் பிரிவுகள்தொகு

ஆறு நிறுவன வகைகளில் ஒவ்வொன்றுக்கும் இந்திய வரலாற்றில் இடம்பெற்ற ஒரு சிறந்த பெண்ணின் பெயரிடப்பட்டது.[1]

தனிப்பட்ட பிரிவுகள்தொகு

  • தைரியம் மற்றும் துணிச்சலுக்கான விருது
  • பெண்கள் முயற்சி, சமூகப் பணிகள், அல்லது ஒரு வித்தியாசம் அல்லது பெண்கள் அதிகாரம் ஆகியவற்றில் சிறந்த பங்களிப்புகளை வழங்குவதற்கான விருதுகள்

வரலாறுதொகு

நாரி சக்தி விருகளுக்கான முன்னோடி ஸ்த்ரீ சக்தி புரஸ்கார் 1999இல் நிறுவப்பட்டது. இது 100,000 மற்றும் ஒரு சான்றுடன் வழங்கப்பட்டது. நாரி சக்தி விருது போன்ற அதே ஆறு பிரிவுகளில் ஸ்த்ரீ சக்தி புரஸ்காரும் வழங்கப்பட்டது.[5] [6]

2021 விருது பெற்றோர்தொகு

2021 விருது வழங்கும் விழா 2022ஆம் ஆண்டு மார்ச் 8 அன்று நடைபெற்றது. இதனை முன்னிட்டு, வெற்றியாளர்கள் நரேந்திர மோடியை சந்தித்தனர்[7]

மேற்கோள்கள்தொகு

  1. 1.0 1.1 1.2 "Nari Shakti Puruskars-National Award for Women-Guidelines"]" (PDF). Ministry of Women and Children, Government of India. 12 March 2019 அன்று பார்க்கப்பட்டது.
  2. "The prestigious Nari Shakti Puraskars, 2016 to be given away by the President tomorrow". Press Information Bureau. Government of India. 2017-03-07. 2017-03-07 அன்று பார்க்கப்பட்டது.
  3. "President gives Stree Shakti awards on International Women's Day". Yahoo News India. 8 March 2013. 2017-09-25 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2021-01-08 அன்று பார்க்கப்பட்டது.
  4. "Stree Shakti Award for Nirbhaya". Daily News and Analysis. 7 March 2013. http://www.dnaindia.com/india/report-stree-shakti-award-for-nirbhaya-1808616. 
  5. "Women's Award (Press release)". Ministry of Women and Child Development, Government of India. 21 May 2009 அன்று மூலம் பரணிடப்பட்டது. 14 March 2014 அன்று பார்க்கப்பட்டது.
  6. "Stree Shakti Puraskar" (PDF). Ministry of Women and Child Development, Government of India. 10 January 2012 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 14 March 2014 அன்று பார்க்கப்பட்டது.
  7. "On International Women's Day, The Honourable President Will Confer Prestigious Nari Shakti Puraskars To 29 Outstanding Individuals For The Years 2020 and 2021". Ministry of Women and Child Development, Press Information Bureau, Government of India. 7 March 2022. 2022-03-08 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நாரி_சக்தி_விருது&oldid=3447992" இருந்து மீள்விக்கப்பட்டது