நீரஜா மாதவ்

நீரஜா மாதவ் (Neerja Madhav) என்பவர் இந்தியாவின் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த இந்திய எழுத்தாளர் ஆவார். இவர் இந்தி மொழியில் எழுதுபவர் ஆவார். மாதவ் 2021- ஆம் ஆண்டில் நாரி சக்தி விருது பெற்றார்.

Woman is handed award by Indian President
நீரஜா மாதவ் நாரி சக்தி விருது பெற்றபோது

தொழில் தொகு

உத்தரப்பிரதேசத்தில் வசிக்கும் மாதவ் இந்தி மொழி எழுத்தாளர் ஆவார்.[1] யம்தீப் (2002), கெஷே ஜம்பா (2006) மற்றும் டைரி ஆஃப் 5-அவர்னா பெண் காவலர் (2010) ஆகியன இவரது புத்தகங்களில் முக்கியமானவையாகும்.[2]

யம்தீப் நாவல் மூன்றாம் பாலினத்தவர் பற்றியது. இதன் மூலம் மாதவ் மூன்றாம் பாலின உரிமைகளுக்காகப் பிரச்சாரம் செய்ய வழிவகுத்தது.[3] இதன் மூலம் இந்திய உச்ச நீதிமன்றம் மூன்றாம் பாலினத்தவரின் மனித உரிமைகளை 2014-ல் அங்கீகரித்தது.[4] கெஷே ஜம்பா இந்தியாவில் உள்ள திபெத்திய அகதிகளைப் பற்றியது. வாரணாசியில் உள்ள மத்திய உயர் திபெத்திய ஆய்வுக் கழகத்தின் பாடத்திட்டத்தின் அடிப்படையில் மேற்கோள் நூலாக வைக்கப்பட்டுள்ளது.[3]

2022ஆம் ஆண்டு அனைத்துலக பெண்கள் நாளன்று இந்தியக் குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந் 2021ஆம் ஆண்டுக்கான நாரி சக்தி விருதினை மாதவிற்கு வழங்கினார்.[5]

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=நீரஜா_மாதவ்&oldid=3401571" இலிருந்து மீள்விக்கப்பட்டது