நிரஞ்சனாபென் முகுல்பாய் கலார்த்தி
நிரஞ்சனாபென் முகுல்பாய் கலார்த்தி (Niranjanaben Mukulbhai Kalarthi) என்பவர் இந்தியாவின் குசராத்து மாநிலத்தினைச் சார்ந்த எழுத்தாளரும் கல்வியாளரும் ஆவார். இவருக்கு 2021ஆம் ஆண்டின் நாரி சக்தி விருது வழங்கப்பட்டது.
தொழில்
தொகுமுகுல்பாய் கலார்த்தி என்ற பெயரில் குசராத்தி மொழியில் இவர் எழுதி வருகின்றார். கலார்த்தி காந்தியைப் குறித்து பா அனே பாபு மற்றும் வல்லபாய் படேலைப் குறித்து குஜராத்னா சிர்ச்சத்ரா சர்தார் ஆகிய புத்தகங்களை எழுதியுள்ளார்.[1]
கலார்த்தி பர்தோலியில் உள்ள சுவராஜ் ஆசிரமத்தின் நிர்வாகி மற்றும் பர்தோலி சத்தியாகிரகத்தில் கலந்துகொண்டவர் ஆவார்.[2] காந்தியின் படைப்புகளை வெளியிடும் நவஜீவன் அறக்கட்டளையின் அறங்காவலராகவும் உள்ளார்.[3] இவர் குசராத்தி மொழியை வளர்ச்சியினை ஊக்குவிக்கும் குழுக்களை நிறுவியுள்ளார். இதற்காக இவர் 2021ஆம் ஆண்டிற்கான நாரி சக்தி விருதினைப் பெற்றார்.[1] 1989-ல் தேசிய ஆசிரியர் விருதையும் பெற்றுள்ளார்.[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 Kainthola, Deepanshu (8 March 2022). "President Presents Nari Shakti Puraskar for the Years 2020, 2021" (in en). Tatsat Chronicle Magazine. https://tatsatchronicle.com/president-presents-nari-shakti-puraskar-for-the-years-2020-2021/.
- ↑ "Greenman Viral Desai Celebrated Gandhi Jayanti by Conducting a Satyagraha at Sardar Ashram". ED Times. 8 September 2021. https://edtimes.in/greenman-viral-desai-celebrated-gandhi-jayanti-by-conducting-a-satyagraha-at-sardar-ashram/.
- ↑ "Navajivan to publish popular literature". The Times of India. 1 June 2017. https://timesofindia.indiatimes.com/city/ahmedabad/navajivan-to-publish-popular-literature/articleshow/58937346.cms.