சுஜாதா பானர்ஜி

சுஜாதா பானர்ஜி (Sujata Banerjee) என்பவர் கணினி அறிவியல் அறிவியலாளர் ஆவார். இவர் கணினி வலையமைப்பு மற்றும் தரவுத்தள சேவைத்தரம் செயல்பாடுகளில் நிபுணத்துவம் பெற்றவர். இங்கிலாந்தில் பிறந்து இந்தியாவிலும் ஐக்கிய நாடுகளிலும் கல்வி கற்றுள்ளார்.[1] இவர் ஐக்கிய நாட்டில் வி. எம். வேரில் ஆய்வுப் பிரிவு துணைத்தலைவராக உள்ளார்.[2]

கல்வியும் பணியும் தொகு

பானர்ஜி இங்கிலாந்தில் பிறந்தார் ஆனால் இந்தியாவின் மும்பையில் வளர்ந்தார்.[1] மும்பை இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தில் இளநிலை மற்றும் முதுநிலை பொறியியல் பட்டம் பெற்றார்.[2] இவர் தெற்கு கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் உள்ள யுஎஸ்சி விட்டெர்பி தொழினுட்ப பள்ளியில் சேர்ந்தார். இங்குக் கணினி தகவல்தொடர்பு அறிவியல் நிறுவனத்தில் படிக்க விரும்பினார், ஆனால் கணினி வலையமைப்பு துறையில் முனைவர் பட்டத்தினை 1993-இல் பெற்றார்.[1] இவரது ஆய்வு, அதிவேக வலையமைப்பில் விநியோகிக்கப்படும் தரவுத்தள அமைப்புகள் குறித்ததாகும். இதனை விக்டர் ஓ. லியால் மேற்பார்வையிட்டார்.[3]

பிட்சுபர்க் பல்கலைக்கழகத்தில் ஆசிரிய உறுப்பினராகப் பதவி வகித்த பிறகு, இவர் தொழில்துறைக்குச் சென்றார். முதலில் எச். பி. ஆய்வகத்திலும்[2] பின்னர் 2017இல் மீண்டும் வி. எம். வேரிலும் மூத்த பணியாளர் ஆராய்ச்சியாளர் மற்றும் வெளிப்புற ஆராய்ச்சிக்கான இயக்குநராகச் சேர்ந்தார்.[4]

அங்கீகாரம் தொகு

பானர்ஜி 2022-இல் ஐஇஇஇ சகாவாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரின் நிரல் மற்றும் ஆற்றல் திறன் கொண்ட வலையமைப்பு சேவைக்காக இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டது.[5]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 1.2 "A home away from home", Viterbi Magazine, USC Viterbi School of Engineering, Fall 2019, பார்க்கப்பட்ட நாள் 2023-07-14
  2. 2.0 2.1 2.2 "Sujata Banerjee, Vice President of Research", Researchers, VMWare Research, பார்க்கப்பட்ட நாள் 2023-07-14
  3. "Distributed database systems in high-speed networks", ACM Digital Library: Theses, Association for Computing Machinery, பார்க்கப்பட்ட நாள் 2023-07-14
  4. "N2Women: Stars in Computer Networking and Communications", Networking Women, IEEE Communications Society, 2018, பார்க்கப்பட்ட நாள் 2023-07-14
  5. IEEE Fellows directory, IEEE, பார்க்கப்பட்ட நாள் 2023-07-14
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுஜாதா_பானர்ஜி&oldid=3886968" இலிருந்து மீள்விக்கப்பட்டது