குறி பார்த்துச் சுடுதல்

துப்பாக்கி வைத்து இலக்கைத் தாக்கும் விளையாட்டு வகை.
(சுடுதல் (விளையாட்டு) இலிருந்து வழிமாற்றப்பட்டது)

குறி பார்த்துச் சுடுதல் (shooting sport) பல்வேறு வெடிகுழல்களை பயன்படுத்தி பங்கேற்கும் விளையாட்டு வீரரின் வேகத்தையும் துல்லியத்தையும் போட்டிக்குட்படுத்துவதாகும். கைத்துப்பாக்கிகள் மற்றும் காற்றழுத்த வெடிகுழல் போன்ற பலவகை குறிபார்த்து சுடும் சுடுகலன்களைக் கொண்டும் குறிகளின் தன்மை கொண்டும் இப்போட்டிகள் வகைபடுத்தப்படுகின்றன.

10 மீட்டர் காற்றழுத்த வெடிகுழல் மூலம் சுடுபவர்.

வில் விளையாட்டுகளும் இத்தன்மையதே என்றாலும் அவை தனிவகை போட்டிகளாக அறியப்படுகின்றன.வேட்டையாடுதல் இந்தவகைப் போட்டியின் ஓர் பங்காக இருந்து வந்தது. ஒலிம்பிக் போட்டியில் ஒரேஒரு முறை (1900 இல்) உயிருள்ள புறாக்களை பறக்கவிட்டு சுடுதல் போட்டி சேர்க்கப்படிருந்தது.அவற்றிற்கு மாற்றாக அவற்றையொத்த களிமண் புறாக்கள் தற்போது பயன்படுத்தப்படுகின்றன.[1][2][3]

மேற்கோள்கள்

தொகு
  1. "Handgun Sports • NSSF | National Shooting Sports Foundation".
  2. "Rifle Sports • NSSF | National Shooting Sports Foundation".
  3. "Shotgun Sports • NSSF | National Shooting Sports Foundation".

வெளியிணைப்புகள்

தொகு

பன்னாட்டு கட்டுப்பாட்டு அமைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=குறி_பார்த்துச்_சுடுதல்&oldid=4058057" இலிருந்து மீள்விக்கப்பட்டது