சுட்டி கான்
நுசரத் கான்(Nusrat Khan)[1] என்றும் அறியப்படும் சுட்டி கான்(Chhuti Khan) 16 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் வங்காள சுல்தானகத்தின் இராணுவத் தளபதியும் மற்றும் சிட்டகொங்கின் ஆளுநராக இருந்தார்.
இலச்கார் சுட்டி கான் | |
---|---|
தாய்மொழியில் பெயர் | ছুটি খান |
பிறப்பு | சிட்டகாங் மாவட்டம், வங்காள சுல்தானகம் |
பணி | இராணுவத் தளபதி |
உறவினர்கள் | பரகல் கான் (தந்தை) , ரஸ்தி கான் (தாத்தா) |
ஆரம்ப கால வாழ்க்கை
தொகுசுட்டி கான் வங்காள சுல்தானின் கீழ் இராணுவத் தளபதிகளாக பணியாற்றிய முஸ்லிம் பிரபுக்களின் குடும்பத்தில் பிறந்தார். இவர்கள் குடும்பம் பல தலைமுறைகளாக சிட்டகொங் பகுதியில் வசித்து வந்தனர். இவரது தந்தை, பரகல் கான் மற்றும் தாத்தா ரஸ்தி கான், வங்காள சுல்தானகத்தின் முந்தைய இராணுவத் தளபதிகளாகவும், வடக்கு சிட்டகொங் பிராந்தியத்தின் ஆளுநர்களாகவும் இருந்தனர்.
தொழில்
தொகுசுட்டி கான், பரம்பரையாக பதவியை வகித்தார். இவர் சுல்தானகத்தின் எல்லைகளை பாதுகாக்கும் பணியை மேற்கொண்டார். கி.பி.1513 மற்றும் 1515 ஆம் ஆண்டுகளில் தான்ய மாணிக்கியாவின் தலைமையில் சுல்தானகத்தை ஆக்கிரமித்த திரிபுரா இராச்சியத்தின் இராணுவத்திலிருந்து இவர் சுல்தானகத்தை வெற்றிகரமாக பாதுகாத்தார். இந்தப் போரில் இவர் திரிபுரா இராச்சியத்தின் பெரும் பகுதிகளை ஆக்கிரமித்தார். மேலும், வங்காள சுல்தானான நசிருதீன் நஸ்ரத் ஷாவுடன் இவருக்கு நல்லுறவு இருந்தது.[2][3]
கான் இலக்கிய ஆதரவாளராகவும் இருந்தார். மகாபாரதத்தின் அசுவமேதயாக அத்தியாயத்தை சமசுகிருதத்தில் இருந்து வங்காள மொழிக்கு மொழிபெயர்க்கும்படி தனது அரசவைக் கவிஞரான ஸ்ரீகர் நந்திக்கு உத்தரவிட்டார். இக்கவிதை இரட்டை மற்றும் திரிபாதி மெட்ரா வடிவத்தில் எழுதப்பட்டது . மேலும், இது சுட்டிகானி மகாபாரதம் என்றும் அழைக்கப்பட்டது. இவர் சிட்டகொங்கில் கட்டிய ஒரு கால்வாய் இன்றும் உள்ளது.[4] இவர் சுட்டி கான் பள்ளிவாசலையும் கட்டினார். இது தற்போது பெரிதும் புனரமைக்கப்பட்டு இன்றும் உள்ளது. [5] சுட்டிகானி மகாபாரதம், மகாபாரதத்தின் முந்தைய வங்காளப் பதிப்புகளில் ஒன்றாகும்.[6][7]
மேற்கோள்கள்
தொகு- ↑ Datta, Amaresh (1987). Encyclopaedia of Indian Literature: A-Devo (in ஆங்கிலம்). Sahitya Akademi. p. 23. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-260-1803-1.
- ↑ Momtaz, Ahmed. "Chhuti Khan". Banglapedia. பார்க்கப்பட்ட நாள் 17 May 2020.
- ↑ Massignon, Louis (2019). The Passion of Al-Hallaj, Mystic and Martyr of Islam, Volume 2: The Survival of Al-Hallaj (in ஆங்கிலம்). Princeton University Press. p. 288. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-691-65721-9.
- ↑ Hossain, Shamsul. "Chhuti Khan's Mosque". Banglapedia. பார்க்கப்பட்ட நாள் 17 May 2020.
- ↑ Hossain, Shamsul. "Chhuti Khan's Mosque". பார்க்கப்பட்ட நாள் 17 May 2020.
- ↑ Ghosh, Pika (2005). Temple to Love: Architecture and Devotion in Seventeenth-century Bengal (in ஆங்கிலம்). Indiana University Press. p. 217. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-253-34487-8.
- ↑ Sarkar, Benoy Kumar (1985). The Positive Background of Hindu Sociology: Introduction to Hindu Positivism (in ஆங்கிலம்). Motilal Banarsidass Publishe. p. 457. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-208-2664-9.