சுட்ரன்சைட்டு

பாசுப்பேட்டுக் கனிமம்

சுட்ரன்சைட்டு (Strunzite) என்பது (Mn2+Fe3+2(PO4)2(OH)2 · 6H2O) என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமமாகும். [3]

சுட்ரன்சைட்டு
Strunzite
செருமனியின் பவேரியாவில் கிடைத்த சுட்ரன்சைட்டு
பொதுவானாவை
வகைகனிமம்
வேதி வாய்பாடுMn2+Fe3+2(PO4)2(OH)2 · 6H2O[1]
இனங்காணல்
நிறம்வைக்கோல் மஞ்சள் முதல் பழுப்பு மஞ்சள் வரை
படிக இயல்புஊசிவடிவப் படிகங்கள்[2]
படிக அமைப்புமுச்சாய்வு
மோவின் அளவுகோல் வலிமை4
மிளிர்வுபளபளப்பு
கீற்றுவண்ணம்வெண்மை
ஒப்படர்த்தி2.52
அடர்த்தி2.52 கி/செ.மீ3
பலதிசை வண்ணப்படிகமைபலவீனமானது
மேற்கோள்கள்[3][4]

முதன்முதலில் 1957 ஆம் ஆண்டில் சுட்ரன்சைட்டு கண்டறியப்பட்டது. இளம் மஞ்சள் நிறத்தில் இக்கனிமம் காணப்படுகிறது.[3]

இது முச்சாய்வுப் படிக அமைப்பில் படிகமாகிறது. இலேசான கண்ணாடிப் பளபளப்பும் 2.52 என்ற ஒப்படர்த்தியும் 4 என்ற மோவின் கடினத்தன்மை அளவும் கொண்டுள்ளது. கனிமங்களில் பெரானைட்டு, குவார்ட்சு மற்றும் சுட்ரெங்கைட்டு ஆகிய கனிமங்களுடன் சேர்ந்து காணப்படுகிறது.

பெர்லின் தொழில்நுட்ப பல்கலைக்கழகப் பேராசிரியர் இயூகோ சுட்ரன்சு நினைவாக கனிமத்திற்கு சுட்ரன்சைட்டு எனப் பெயரிடப்பட்டது.[5]

பன்னாட்டு கனிமவியல் சங்கம் சுட்ரன்சைட்டு கனிமத்தை Snz[6] என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. "Strunzite R050619". RRUFF. பார்க்கப்பட்ட நாள் 8 April 2020.
  2. "General Strunzite Information". WebMineral. பார்க்கப்பட்ட நாள் 8 April 2020.
  3. 3.0 3.1 3.2 "Strunzite". Mindat.org. பார்க்கப்பட்ட நாள் 8 April 2020.
  4. Grey, I. E.; Macrae, C. M.; Keck, E.; Birch, W. D. (October 2012). "Aluminium-bearing strunzite derived from jahnsite at the Hagendorf-Süd pegmatite, Germany". Mineralogical Magazine 76 (5): 1165–1174. doi:10.1180/minmag.2012.076.5.08. Bibcode: 2012MinM...76.1165G. 
  5. "Strunzite". Dakota Matrix Minerals. பார்க்கப்பட்ட நாள் 8 April 2020.
  6. Warr, L.N. (2021). "IMA–CNMNC approved mineral symbols". Mineralogical Magazine 85 (3): 291–320. doi:10.1180/mgm.2021.43. Bibcode: 2021MinM...85..291W. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுட்ரன்சைட்டு&oldid=4133673" இலிருந்து மீள்விக்கப்பட்டது