சுதன்சூ சோபன் மைத்ரா

இந்திய மருத்துவர்

சுதன்சூ சோபன் மைத்ரா (Sudhansu Sobhan Maitra) இந்தியாவைச் சேர்ந்த ஒரு மருத்துவராவார். புதுதில்லியில் உள்ள இராம் மனோகர் உலோகியா மருத்துவமனையில் ஆசிரிய உறுப்பினராக இருந்தார். முன்னதாக இம்மருத்துவமனை வெலிங்டன் மருத்துவமனை என்ற பெயரால் அழைக்கப்பட்டது. பாட்னா பல்கலைக்கழகத்தில் பட்டதாரியான இவர் இரண்டாம் உலகப் போரில் வீரராகவும் இருந்தார். இதற்காக 1944 ஆம் ஆண்டு இவர் போர் பதக்கத்தைப் பெற்றார். போருக்குப் பிறகு மைத்ரா புது தில்லி வெலிங்டன் மருத்துவமனையில் கௌரவ விரிவுரையாளரானார்.[1] மருத்துவத் துறையில் இவர் ஆற்றிய பணிக்காக இந்தியாவின் மூன்றாவது மிக உயர்ந்த குடிமக்கள் விருதான் பத்ம பூசண் விருது 1962 ஆம் ஆண்டு சுதன்சூ சோபன் மைத்ராவிற்கு வழங்கப்பட்டது.[2] எடின்பரோவின் இராயல் மருத்துவர்கள் கல்லூரியும் இவரை 1964 ஆம் ஆண்டில் ஒரு சக உறுப்பினராகத் தேர்ந்தெடுத்தது.[1]

சுதன்சூ சோபன் மைத்ரா
Sudhansu Sobhan Maitra
பிறப்புஇந்தியா
பணிமருத்துவர்
விருதுகள்

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "Obituaries" (PDF). Royal College of Physicians of England. 1999. பார்க்கப்பட்ட நாள் 2018-05-24.
  2. "Padma Awards". Padma Awards. Government of India. 2018-05-17. Archived from the original on 2018-10-15. பார்க்கப்பட்ட நாள் 2018-05-17.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுதன்சூ_சோபன்_மைத்ரா&oldid=4109618" இலிருந்து மீள்விக்கப்பட்டது