சுதிர் இலட்சுமணராவ் பர்வே

இந்திய அரசியல்வாதி

சுதிர் இலட்சுமண்ராவ் பர்வே (Sudhir Laxmanrao Parwe) என்பவர் மகாராட்டிர மாநிலத்தினைச் சேர்ந்த அரசியல்வாதி ஆவார். இவர் 13வது மகாராட்டிர சட்டப் பேரவையின் உறுப்பினர் ஆவார். இவர் உம்ரெட் சட்டமன்றத் தொகுதியினைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். இவர் பஞ்சாயத்து ராஜ் குழுவின் (மாநில அமைச்சர் அந்தஸ்து), மகாராஷ்டிரா சட்டமன்றத்தின் தலைவராக 2017 முதல் 2019 வரை இருந்தார். இவர் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர்.[1] பர்வே 2009-ல் வென்ற இடத்தைத் தக்க வைத்துக் கொண்டார். இவர் அப்போதும் பாரதிய ஜனதா கட்சியிலேயே பணியாற்றினார்.[2]

சர்ச்சை தொகு

ஏப்ரல், 2015-ல்,ஆரம்ப பள்ளி ஆசிரியரை அறைந்ததற்காக பர்வேக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இந்த தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்து பிணைப் பெற்றுள்ளார். பர்வே 2005-ல் கார்கோவ் ஜில்லா பரிஷத் தொகுதியின் உறுப்பினராக இருந்தார். அப்போது தலைமை ஆசிரியர் ஒருவர் பள்ளியின் பெண் ஊழியரிடம் தவறாக நடந்து கொண்டார். இதற்காக அத்தலைமையாசிரியரை அடித்த வழக்கில் இத்தண்டனை வழங்கப்பட்டது.

மேற்கோள்கள் தொகு