சுதீரா சுந்தரி தேவி
சுதீரா சுந்தரி தேவி நாராயண் (Sudhira Sundari Devi) இந்தியப் பிரிவினைக்கு முன்னர் பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியில் சுதேச சமத்தானமாக விளங்கிய கூச் பெகர் சமத்தானத்தின் இந்திய இளவரசி ஆவார். மாண்டர் இளவரசி என்ற பெயராலும் இவர் அழைக்கப்பட்டார்.[1][2][3] 1894 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 7 ஆம் தேதி கல்கத்தாவில் கூச் பெகரின் மகாராசா சர் நிருபேந்திர நாராயண் பூப் பகதூரின் இளைய மகளாகப் பிறந்தார். மன்னராட்சிப் பகுதியின் மகாராணியான சுனிதி தேவி இவரது தாயார் ஆவார்.[4][5] 1914 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 25 ஆம் தேதியன்று இவர் கல்கத்தாவில் உள்ள உட்லண்ட்சில் நடிகர், திரைப்பட இயக்குனர் மற்றும் எழுத்தாளருமான மைல்சு மாண்டரின் சகோதரர் ஆலன் மாண்டரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு இரண்டு மகன்கள் மற்றும் இரண்டு மகள்கள் இருந்தனர். 1968 ஆம் ஆண்டு சனவரி மாதம் 7 ஆம் தேதி இலண்டனில் உள்ள 40 இயர்ஃபோர்ட் சாலையில் சுதீரா இறந்தார்.
சுதீரா சுந்தரி தேவி நாராயண் Sudhira Sundari Devi Narayan | |
---|---|
மகாராசகுமாரி | |
கூச் பெகர் சமத்தானத்தின் இளவரசி சுதீரா (1910) | |
பிறப்பு | 1894 |
இறப்பு | 1968 |
அரசமரபு | கூச் வம்சம் |
தந்தை | நிருபேந்திர நாராயண் |
தாய் | சுனிதி தேவி |
இதையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Poddar, Abhishek; Gaskell, Nathaniel; Pramod Kumar, K. G; Museum of Art & Photography (Bangalore, India) (2015). "Cooch Bihar". Maharanis: women of royal India (in English). Ahmedabad. pp. 100–103. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-93-85360-06-0. இணையக் கணினி நூலக மைய எண் 932267190.
{{cite book}}
: CS1 maint: location missing publisher (link) CS1 maint: unrecognized language (link) - ↑ "Princess Sudhira of Cooch Behar - National Portrait Gallery". www.npg.org.uk (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 20 August 2022.
- ↑ "The London Gazette" (PDF). 1 August 1939. p. 5377.
- ↑ Nicholas Mander. ‘’Varnished Leaves: a biography of the Mander family of Wolverhampton.’’ Owlpen Press, 2004.
- ↑ Mosley, Charles, editor, Burke's Peerage, Baronetage & Knightage, 107th edition, 3 volumes (Burke's Peerage (Genealogical Books) Ltd, 2003), volume 2, page 2589, sub Mander baronetcy of the Mount [U.K.], cr. 1911.