சுதீர் கரமனை

இந்திய நடிகர்

சுதீர் கரமனை (Sudheer Karamana) ஒரு இந்திய திரைப்பட நடிகராவார். இவர் முக்கியமாக மலையாளத் திரைப்படங்களில் தோன்றினார். இவர் மூத்த நடிகர் கரமனை ஜனார்த்தனன் நாயரின் மகனாவார்.[1]

சுதீர் கரமனை
பிறப்புகரமனை, திருவனந்தபுரம், கேரளம், இந்தியா
பணிதிரைப்பட நடிகர்
செயற்பாட்டுக்
காலம்
2006–தற்போது வரை
பெற்றோர்கரமனை ஜனார்தனன் நாயர்
ஜெயா
வாழ்க்கைத்
துணை
அஞ்சனா
பிள்ளைகள்சூர்யநராயணன்
கௌரிகல்யாணி

சொந்த வாழ்க்கை

தொகு

திருவனந்தபுரத்தின் கரமனையில் நடிகர் கரமனை ஜனார்தனன் நாயர், ஜெயா ஆகியோருக்கு மூத்த மகனாகப் பிறந்தார்.[2] இவருக்கு சுனில் மற்றும் சுஜய் என்ற இரண்டு சகோதரர்கள் உள்ளனர். இவர் பட்டம், கேந்திரிய வித்யாலயா பள்ளியில் பயின்றார். பின்னர் திருவனந்தபுரம் பல்கலைக்கழக கல்லூரியில் புவியியல் பட்டம் பெற்றார். மேலும் திருவனந்தபுரம் அரசு ஆசிரியர் கல்வியியல் கல்லூரியில் இளங்கலை கல்வியையும் பெற்றார். பிறகு திருவனந்தபுரத்தில் உள்ள புவி அறிவியல் ஆய்வு மையத்தில் பணியாற்றினார். பின்னர் திருவனந்தபுரம் கிறிஸ்து நகர் பள்ளியிலும், 1993 ல் கத்தாரின் எம்.இ.எஸ் இந்தியப் பள்ளியிலும் ஆசிரியராகப் பணியாற்றினார். பின்னர் 1998 ஆம் ஆண்டில் கத்தாரிலிருந்து திரும்பிய இவர் வெங்கனூரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக சேர்ந்தார். 2003இல் இவர் அங்கு முதல்வரானார். 13 ஆண்டுகளாக திருவனந்தபுரம் வெங்கனூர் மகளிர் மேல்நிலைப்பள்ளியின் முதல்வராக பணியாற்றி வருகிறார்.[3]

திருமணம்

தொகு

சாஸ்தமங்கலம் மேல்நிலைப்பள்ளியில் பணிபுரியும் அஞ்சனா என்ற பள்ளி ஆசிரியரை மணந்தார். இவர்களுக்கு சூர்யநராயணன் என்ற ஒரு மகனும், கௌரிகல்யாணி என்ற ஒரு மகளும் உள்ளனர்.[4] இவர் தனது குடும்பத்துடன் திருவனந்தபுரத்தில் குடியேறினார்.[5]

மேற்கோள்கள்

தொகு
  1. "Four actor sons unite in 'Left Right Left' - Times Of India". Archived from the original on 2013-05-28. பார்க்கப்பட்ட நாள் 2014-02-18.
  2. "My father is my favourite actor- Sudhir Karamana". nowrunning.com. Archived from the original on 2014-02-21. பார்க்கப்பட்ட நாள் 2014-02-18.
  3. "സാംസ്‌കാരിക പ്രവര്‍ത്തനത്തിനുള്ള എനര്‍ജി എസ്‌.എഫ്‌.ഐ.യില്‍ നിന്ന്‌ ലഭിച്ചു- സുധീര്‍ കരമന". mangalam.com. mangalam. 20 August 2014. பார்க்கப்பட்ட நாள் 21 August 2014.
  4. "Mangalam varika". mangalam.com. Archived from the original on 16 April 2014. பார்க்கப்பட்ட நாள் 15 April 2014.
  5. "'Kaanchi' is an edgy adventure, says director Krishnakumar - The New Indian Express". newindianexpress.com. பார்க்கப்பட்ட நாள் 2014-02-18.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுதீர்_கரமனை&oldid=4172021" இலிருந்து மீள்விக்கப்பட்டது