கரமனை
கரமனை (Karamana) என்பது இந்தியாவின் கேரளாவின் தலைநகரான திருவனந்தபுரத்தின் ஒரு புறநகர்ப் பகுதியாகும். இது திருவனந்தபுரத்தின் மிகவும் அடர்த்தியான, ஆனால் பசுமையான பகுதியாகும். கரமனையின் நிலம் மேற்குத் தொடர்ச்சி மலையின் தெற்கு முனையான அகக்தியமலையிலிருந்து தொடங்கும் கரமனை ஆற்றின் மூலம் வளமாகிறது. இந்த நதி மேற்கு நோக்கி 68 கி.மீ தூரம் பாய்கிறது. மேலும் கோவளம் அருகே திருவல்லம்-கருமம் பகுதியில் அரேபிய கடலில் இணைகிறது. கரமனையிலுள்ள உள்ள ஜும்மா மசூதி ஒரு பிரபலமான அடையாளமாகும். கரமனை அதன் பரபரப்பான "தினசரி சந்தை" (ஒரு உழவர் / உற்பத்தி சந்தை) என்பதற்காகவும் அறியப்படுகிறது. மேலும் வர்த்தகத்துக்கு அண்டை மாநிலமான தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து வந்துபோகும் மக்களுக்கு இது ஒரு முக்கிய போக்குவரத்து புள்ளியாகும்.
கரமனை | |
---|---|
புறநகர் பகுதி | |
ஆள்கூறுகள்: 8°30′11″N 76°57′07″E / 8.503°N 76.952°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | கேரளம் |
மாவட்டம் | திருவனந்தபுரம் |
வட்டங்கள் | திருவனந்தபுரம் |
மொழிகள் | |
• அலுவல் | மலையாளம், ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் குறியீட்டு எண் | 695002 |
வாகனப் பதிவு | KL-01 |
சொற்பிறப்பியல்
தொகு'கரமனை' இந்த இடத்தின் பெயர் ஆற்றின் கரையில் வசித்து வந்த ஒரு பிரபலமான நம்பூதிரி (கேரள பிராமணர்) குடும்பத்திலிருந்து வந்தது. அந்த காலத்தில் மக்களின் வாழ்க்கை பிராமண குடும்பத்தைச் சுற்றி ஒட்டிக்கொண்டிருந்தது. எனவே, வெறுமனே 'மனை' என்று குறிப்பிடுவது வீடு என்றும் 'கர' என்பது ஆற்றின் கரை என்பதாக, "கரமனை" ஆனது. கால ஓட்டத்தில், இந்த குடும்பம் அழிந்துவிட்டது. ஆனால், பெயர்மட்டும் இன்றும் உள்ளது.
குடிமைச் சமூகமும் நிர்வாகமும்
தொகுகரமனை திருவனந்தபுரம் மாநகர எல்லைக்குள் இருபதாவது பகுதியாக குறிப்பிடப்படுகிறது. திருவனந்தபுரத்தின் பெரும்பாலான பகுதிகளைப் போல, கரமனையிலும் கணிசமான மலையாள மொழி பேசும் மக்கள் உள்ளனர். இது திருவனந்தபுரத்தில் பணக்காரத்தனமும் துடிப்பும் கலாச்சார காட்சிக்கு மகத்தான பங்களிப்பை அளிக்கிறது. இது திருவனந்தபுரத்தின் பழமையான தமிழ் பிராமண குடியேற்றங்களில் ஒன்றாகும். மேலும் பழைய "தெரு" பாணியான சுவர் பகிர்வு நகர வீடுகளைக் கொண்டுள்ளது. இது பல்வேறு மதங்களையும் சாதிகளையும் சேர்ந்த ஒரு பெரிய சமூகத்தை பராமரிக்கிறது. கரமனை மதச்சார்பின்மைக்கும் கலாச்சார சகிப்புத்தன்மைக்கும் ஒரு மாதிரியாகும். கேரளாவின் முக்கிய பயண, வர்த்தக பாதையான தேசிய நெடுஞ்சாலை 47, கரமனை வழியாக திருவனந்தபுரத்தின் மத்திய வணிக மாவட்டங்களுக்கு செல்கிறது.
பிரபல நபர்கள்
தொகுகரமனையை தங்கள் இல்லமாக மாற்றிய பல புகழ்பெற்ற நபர்களில் திவான் பகதூர் வீரராகவபுரம் நாகமையா (கேரளாவில் முதல் இளங்கலை கலை பட்டதாரி ஆவார்). திருவிதாங்கூர் மாநிலத்தின் வளர்ச்சிக்கு பங்களித்த நபர்களில் ஒருவரான அவர் வாழ்ந்த தெருவுக்கு "நாகமையா அவென்யூ" என்று பெயரிடப்பட்டது. அக்கால பிரபல பத்திரிகையாளர் கரமனை ஏ.பி. ஐயர் என அறியப்படும் ஏ.பத்மநாப ஐயர் (1869-1942 ) இந்த தெருவில் சி.யக்னநாராயணன், சீதாலட்சுமி ஆகியோருக்குப் பிறந்தார். அவர் தனது வாழ்நாள் முழுவதும் இந்த இடத்தில் வாழ்ந்தார். அவர் சுமார் 179 புத்தகங்களை எழுதினார். நவீன மைசூர் என்ற நூல் சர் சி.பி.ராமசாமி ஐயரின் 60ஆவது பிறந்த நாளில் நவீன திருவிதாங்கூர் நினைவு பரிசாக வெளியிடப்பட்டது.
தமிழில் பல பக்தி பாடல்களை எழுதிய சிறந்த ஆன்மீக சாதனைகளை உடையவரும், நீலகண்ட தாசர் என்று பின்னர் அறியப்பட்ட நீலகண்ட சிவன் கரமனையைச் சேர்ந்தவர்.[1] அவரது சீடரான பாபநாசம் சிவன் அவரது பாடல்களால் பெரிதும் ஈர்க்கப்பட்டார். அவர் தனது 35ஆவது வயது வரை அரசு சேவையில் இருந்தார். பின்னர், சிவனைப் புகழ்ந்து பாடல்களை இசையமைக்கத் தொடங்கி, ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை இயற்றினார்.[2] அவர் "நீலகண்டனை" முத்திரையாகப் பயன்படுத்தினார். அவரது மிகப்பெரிய பங்களிப்பு 'லலிதா மகாத்மியம்' என்பதாகும்.[3]
1890இல் திருவிதாங்கூரின் திவானாக இருந்த திவான் சங்கரசுப்பு ஐயர், இப்பகுதியைச் சேர்ந்தவர். எஸ்.எஸ். தெரு (இரட்டை தெரு), ஒரு கீழ்நிலைப்பள்ளி ஆகியவைக்கு அவரது பெயரிடப்பட்டன. எஸ்.எஸ்.தெருவில் அமைந்துள்ள ஒரு மாளிகையில் திவான் வசித்து வந்தார். இது "திவான்ஜி ஆம்" (அமைச்சரின் வீடு) என்று அழைக்கப்படுகிறது. அவரது பேரக்குழந்தைகள், நீதிபதி டி.எஸ்.கிருட்டிணமூர்த்தி ஐயர், நீதிபதி எஸ். பத்மநாபன், முறையே கேரள உயர் நீதிமன்றம், மெட்ராஸ் உயர் நீதிமன்ற நீதிபதிகளாக இருந்தனர். இவர்களது தந்தை சங்கரசுப்பு ஐயரும் திருவிதாங்கூர் உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்தார். இவரது மருமகன் சங்கரசுப்பன் 1996 முதல் 2006 வரை கேரள உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாக இருந்தார்.
இந்தியாவின் முன்னணி நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்களில் ஒருவரான மருத்துவர் சாம்பசிவன் கரமனையைச் சேர்ந்தவர்.[4]
சிறந்த சொற்பொழிவாளரும் மலையாள அறிஞருமான சூரநாடு குஞ்ஞன் பிள்ளையும் கரமனையைச் சேர்ந்தவராவார். மலையாத்தூர் இராமகிருஷ்ணன், என்ற பிரபல மலையாள எழுத்தாளர் கரமனையின் சாத்திரி நகரில் வசித்து வந்தார்.
விருது பெற்ற நாடக ஆசிரியர் கரமனை ஜனார்த்தனன் நாயர் இந்த பகுதியைச் சேர்ந்தவர்.
பிரபல பின்னணிப் பாடகி கே.எஸ் சித்ரா இந்தப் பகுதியைச் சேர்ந்தவர்.
நன்கு அறியப்பட்ட தொண்டு நிறுவனமான தென்னிந்திய மீனவர் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைமையகம் இங்குள்ள கரமனை ஆற்றங்கரையில் உள்ளது.
ஆர்வமுள்ள இடங்கள்
தொகுகரமனை புகழ்பெற்ற சத்தியவாகேசுவரர் ( சிவபெருமானின் ) கோவிலாகும். தளியல் மகாதேவர் கோயில் மிக அருகில் உள்ளது.
ஒவ்வொரு ஆண்டும், தைப்பூசம் திருவிழா ஆடம்பரமாக இங்கு நடத்தப்படுகிறது.