அகத்தியமலை

அகத்தியமலை அல்லது அகத்தியக் கூடம் என்பது மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள ஒரு மலைமுடியாகும். இதன் உயரம் 1,868 மீட்டர்கள். இம்மலை நெய்யாறு கானுயிர்க் காப்பகத்தின் ஒரு பகுதி. இது தமிழக - கேரள மாநிலங்களின் எல்லையில் அமைந்துள்ளது. தாமிரபரணி ஆறு இம்மலையில் தோன்றி திருநெல்வேலி மாவட்டத்தின் ஊடாகப் பாய்கிறது. இம்மலை அகத்திய முனிவரின் பக்தர்களால் புண்ணிய தலமாகக் கருதப்படுகிறது. மலை முகட்டில் அகத்தியருக்கு ஒரு சிறு கோவில் அமைந்துள்ளது.

அகத்தியமலை

படங்கள்தொகு

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Agastya Mala
என்பதின் ஊடகங்கள் உள்ளன.

இவற்றையும் பார்க்கவும்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அகத்தியமலை&oldid=3041880" இருந்து மீள்விக்கப்பட்டது