நீலகண்ட சிவன்
நீலகண்ட சிவன் (1839-1900) ஒரு கருநாடக இசையமைப்பாளர் ஆவார். இவர் சாதாரண இசைப் பயிற்சியைப் பெறவில்லை என்றாலும், இவரது பாடல்கள் ஆழ்ந்த தொழில்நுட்ப அறிவாற்றலை வெளிப்படுத்துகின்றன. நீலகண்ட சிவன் நாகர்கோவில் பகுதியிலுள்ள வடிவீசுவரத்தில் 1839 ஆம் ஆண்டில் பிறந்தார். பழைய திருவாங்கூர் தலைநகரான பத்மநாபபுரத்தில் தங்கினார். இவரது தந்தை சுப்பிரமணிய ஐயர் பத்மநாபபுரம் நீலக்கண்டசுவாமி கோவிலில் ஒரு அதிகாரியாக இருந்தார். சிவனின் தாயார் அழகம்மாள்.
நீலகண்ட சிவன் ஒரு சில ஆண்டுகளுக்கு ஒரு கிராமப் பஞ்சாயத்துத் தலைவராகப் பணியாற்றினார். மதப் பழக்கங்களை பின்பற்ற இந்த தொழிலை விட்டுவிட்டார்.
இவரது சில பாடல்கள்
தொகு- சம்போ மகாதேவ சரணம் (இராகம் பௌலி)[1]
- ஆனந்த நடமாடுவார் தில்லை அம்பலம் தன்னில் (பூர்விகல்யாணி)[2]
- என்றைக்கு சிவக்கிருபை வருமோ (முகாரி)
- என்ன வந்தாலும் நான் உன்னை மறப்பதில்லை (காம்போதி)
- ஒருநாள் ஒரு பொழுதாகிலும் சிவனை உச்சரிக்க வேணும் (கமாசு)
- வா வா கலைமதி (சங்கராபரணம்)
- ஓராறு முகனே (ரீத்திகௌளை)
- கடைக்கண் பாரையா (தர்பார்)
- சிவனை நினைத்து துதி (காம்போதி)
என்பவை மிகவும் பிரபலமான பாடல்கள் ஆகும்.[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ "SambhO mahA dEva SaraNam sri kALadhISa - MS Subbulakshmi".
{{cite web}}
: CS1 maint: url-status (link) - ↑ "Ananda naTamAduvAr tillai - Sikkil Gurucharan". Archived from the original on 1 March 2021. பார்க்கப்பட்ட நாள் 1 March 2021.
- ↑ Famous Songs, Forgotten Composer பரணிடப்பட்டது 1 நவம்பர் 2006 at the வந்தவழி இயந்திரம் from Indian Express newspaper, at Carnatic Corner