தீரசங்கராபரணம்
சங்கராபரணம் (அல்லது தீரசங்கராபரணம்) கருநாடக இசை முறையில் 29 ஆவது மேளகர்த்தா அல்லது ஜனக இராகமாகும். விரிவான ஆலாபனைக்கு இடம் தரும் இராகம். இந்துஸ்தானி இசையில் பிலாவல் தாட் என்றழைக்கப்படுகிறது. பண்டைய தமிழிசைப் பண்களில் பழம்பஞ்சுரம் என்னும் பெயருடன் அழைக்கப்படுகிறது.[1]
இலக்கணம்
தொகுஆரோகணம்: | ஸ ரி2 க3 ம1 ப த2 நி3 ஸ் |
அவரோகணம்: | ஸ் நி3 த2 ப ம1 க3 ரி2 ஸ |
சிறப்பு அம்சங்கள்
தொகு- இதன் மத்திமத்தை பிரதி மத்திமமாக மாற்றினால் இராகம் மேசகல்யாணி ஆகும்.
- இது ஒரு மூர்ச்சனாகாரக மேளம்.
- கிரக பேதத்தின் வழியாக இந்த மேளத்தின் ரி, க, ம, ப, த ஆகிய சுரங்கள் முறையே கரகரப்பிரியா, ஹனுமத்தோடி, மேசகல்யாணி, ஹரிகாம்போஜி, நடபைரவி ஆகிய மேளங்களைத் தோற்றுவிக்கின்றன.
உருப்படிகள்
தொகு- கிருதி : எதுட நிலிசிதே : ஆதி : தியாகராஜர்.
- கிருதி : எந்துகு பெத்தலவலெ : ஆதி : தியாகராஜர்.
- கிருதி : மநஸு ஸ்வாதீநமைந : ரூபகம் : தியாகராஜர்.
- கிருதி : ஸுந்தரேஷ்வராய : ரூபகம் : முத்துசுவாமி தீட்சிதர்.
- கிருதி : ஸ்ரீ கமலாம்பிகயா : ரூபகம் : முத்துசுவாமி தீட்சிதர்.
- கிருதி : ஸரோஜதள நேத்ரீ : ஆதி : சியாமா சாஸ்திரிகள்.
- வர்ணம் :சலமே :கண்ட ஜாதி அட தாளம்: சுவாதித் திருநாள்
ஜன்ய இராகங்கள்
தொகு- பல ஜன்ய இராகங்களைக் கொண்ட மேளகர்த்தா.
எண் | பெயர் | ஆரோகணம் | அவரோகணம் |
1 | அடாணா | ஸரிமபநிஸ் | ஸ்நிதாபமகாரிஸ |
2 | ஆரபி | ஸரிமபதஸ் | ஸ்நிதபமகரிஸ |
3 | கதனகுதூகலம் | ஸரிமதநிகபஸ் | ஸ்நிதபமகபமகரிஸ |
3 | கருடத்வனி | ஸரிகமபதநிஸ் | ஸதபகரிஸ் |
4 | கன்னடா | ஸகமபமதனிஸ் | ஸ்நிஸ்தபமகமரிஸ |
5 | கஜவர்த்தனி | ஸகமதநிஸ் | ஸ்தபமகரிஸ |
6 | குறிஞ்சி | (த)ஸரிகமபத | தபமகரிஸ(த) |
7 | கேதாரம் | ஸமகமபநிஸ் | ஸ்நிபமகஸரிகஸ |
8 | கோலாகலம் | ஸபமகமபதநிஸ் | ஸ்நிதபமகரிஸ |
9 | கௌடமலாரு | ஸரிமபதஸ் | ஸ்நிதமகரிஸ |
10 | சாயாசிந்து | ஸரிமபதஸ் | ஸ்தபமகரிஸ |
11 | சிந்துமந்தாரி | ஸரிகமபஸ் | ஸ்நிதபகமதபமரிஸ |
12 | சுத்தசாவேரி | ஸரிமபதஸ் | ஸ்தபமரிஸ |
13 | சுத்தவசந்தம் | ஸரிமபதநிஸ் | ஸ்நிதபமதமகஸ |
14 | தேவகாந்தாரி | ஸரிகரிமபதநிஸ் | ஸ்நித.பமகரி.ஸ |
15 | நவரோஜ் | பதநிஸ்ரிகமப | மகரிஸநிதப |
16 | நளினகாந்தி | ஸகரிமபநிஸ் | ஸ்நிபமகரிஸ |
17 | நீலாம்பரி | ஸரிகமபநிதநிஸ் | ஸ்நிபதநிபமகரிகஸ |
18 | பிலகரி | ஸரிகபதஸ் | ஸ்நிதபமகரிஸ |
19 | பூர்ணசந்த்ரிகா | ஸரிகமபதபஸ் | ஸ்நிபதபமகரிஸ |
20 | பேகடா | ஸகரிகமபதநிதபஸ் | ஸ்நிதபமகரிஸ |
21 | பேஹாக் | ஸகமபநிதநிஸ் | ஸ்நிதபமகமக.ரிஸ் |
22 | விவர்தனி | ஸரிமபஸ் | ஸ்நிதபமகரிஸ |
23 | ஹம்சத்வனி | ஸரிகபநிஸ் | ஸ்நிபகரிஸ |
24 | சனரஞ்சனி | ஸரிகமபதநிஸ் | ஸ்தபமரிஸ |
மேற்கோள்கள்
தொகு- ↑ அ. கி. மூர்த்தி (1998). சைவ சித்தாந்த அகராதி. சென்னை: திருநெல்வேலி, தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், லிமிடெட். p. 161.
வெளி இணைப்புகள்
தொகு- Tanam-Thillana in Raga Shankarabharanam - டி. எம். கிருஷ்ணாவின் வாய்ப்பாட்டுக் காணொலி