கேதாரம் (இராகம்)

கேதாரம் இருபத்தொன்பதாவது மேளகர்த்தா இராகமும், "பாண" என்று அழைக்கப்படும் ஐந்தாவது சக்கரத்தின் ஐந்தாவது இராகமுமாகிய தீரசங்கராபரணத்தின் ஜன்னிய இராகம் ஆகும்.

இலக்கணம்

தொகு

இந்த இராகத்தில் சட்சம் (ச), சுத்த மத்திமம் (ம1), அந்தர காந்தாரம் (க3), பஞ்சமம் (ப), காகலி நிசாதம் (நி3), சதுச்ருதி ரிசபம் (ரி2) ஆகிய சுரங்கள் வருகின்றன. இதன் ஆரோகண அவரோகணங்கள் பின்வருமாறு:

ஆரோகணம்: ச ம131 ப நி3
அவரோகணம்: ச நி3 ப ம13 ரி2

இந்த இராகத்தில் எல்லாச் சுரங்களும் முழுமையாக அமையாததால் இது ஒரு வர்ஜ இராகம் ஆகும். இதன் ஆரோகணத்தில் 5 சுரங்களும் அவரோகணத்தில் 6 சுரங்களும் உள்ளன. இதனால் இதை "ஔடவ சாடவ" இராகம் என்பர். இதன் ஆரோகணத்தில் மத்திமம் ஒழுங்கு மாறி வருவதால் இது ஒரு வக்கிர இராகம் ஆகும்.

உருப்படிகள்

தொகு
  1. கிருதி : "ராம நீபை" - ஆதி - தியாகராஜர்
  2. கிருதி : "ஆனந்த நடன ப்ரகாசம்" - மிஸ்ர சாபு - முத்துஸ்வாமி தீட்சிதர்

இவற்றையும் பார்க்கவும்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கேதாரம்_(இராகம்)&oldid=951176" இலிருந்து மீள்விக்கப்பட்டது