மேசகல்யாணி

மேச கல்யாணி (அல்லது கல்யாணி) கருநாடக இசையின் 65வது மேளகர்த்தா இராகம். எப்பொழுதும் பாடக் கூடிய இவ்விராகத்திற்கு மாலைப் பொழுது மிகவும் பொருத்தமானதாகும். நல்ல எடுப்பான இராகம் ஆகையால், நிகழ்ச்சிகளின் தொடக்கத்தில் பாடக் கூடிய இராகம். அசம்பூர்ண மேளபத்ததியில் இந்த இராகத்திற்கு சாந்த கல்யாணி என்று பெயர்.இந்துஸ்தானி இசையில் இவ்விராகத்திற்கு யமன் தாட் என்று பெயர்.

இலக்கணம்

தொகு
 
கல்யாணி சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்
ஆரோகணம்: ஸ ரி232 ப த2 நி3 ஸ்
அவரோகணம்: ஸ் நி32 ப ம23 ரி2
  • ருத்ர என்றழைக்கப்படும் 11வது சக்கரத்தில் 5 வது மேளம்.
  • இந்த இராகத்தில் ஷட்ஜம், சதுஸ்ருதி ரிஷபம்(ரி2), அந்தர காந்தாரம்(க3), பிரதி மத்திமம்(ம2), பஞ்சமம், சதுஸ்ருதி தைவதம்(த2), காகலி நிஷாதம்(நி3) ஆகிய சுரங்கள் வருகின்றன.

சிறப்பு அம்சங்கள்

தொகு
  • பிரதி மத்திம இராகங்களில் மிகச் சிறந்த இவ்விராகம், விரிவான ஆலாபனைக்கு இடம் கொடுக்கும்.
  • ஸ்புரித, திரிபுச்ச கமகங்கள் இவ்விராகத்தின் சாயலைக் காட்டும்.
  • இராகம்-தானம்-பல்லவிக்கு ஏற்ற இராகம்.
  • எல்லா விதமான இசை வகைகளும் இவ்விராகத்தில் இயற்றப்பட்டுள்ளன.
  • பண்டைய மேளமாகிய ஷட்ஜக் கிராமத்தின் காந்தார மூர்ச்சனை கல்யாணி.
  • 29வது மேளமாகிய சங்கராபரணத்தின் நேர் பிரதி மத்திம மேளம் ஆகும்.
  • மூர்ச்சனாகாரக மேளம். இதன் ரிஷப, காந்தார, பஞ்சம, தைவத, நிஷாத மூர்ச்சனைகள் முறையே ஹரிகாம்போஜி (28), நடபைரவி (20), சங்கராபரணம் (29), கரகரப்பிரியா (22), தோடி (08) ஆகிய மேளங்களைத் தோற்றுவிக்கின்றன.
  • ஹங்கேரி நாட்டு இசையிலும் இந்த இராகம் காணப்படுகிறது.

உருப்படிகள்

தொகு

ஜன்ய இராகங்கள்

தொகு

மேசகல்யாணியின் ஜன்ய இராகங்கள் இவை.

திரையிசைப் பாடல்கள்

தொகு

மேசகல்யாணி இராகத்தில் அமைந்த திரையிசைப் பாடல்கள்

  • சிந்தனை செய் மனமே - அம்பிகாபதி.
  • வந்தாள் மகாலக்ஷ்மியே - உயர்ந்த உள்ளம்.
  • மலையோரம் மயிலே விளையாடும் குயிலே - ஒருவர் வாழும் ஆலயம்.
  • வெள்ளைப்புறாவொன்று - புதுக்கவிதை.
  • இனியகானம் - பாட்டுப்பாடவா.
  • மன்னவன் வந்தானடி தோழி - திருவருட்செல்வர்.
  • அம்மா என்றழைக்காத உயிர் - மன்னன்.
  • நிற்பதுவே நடப்பதுவே - பாரதி.
  • ஜனனி ஜனனி - தாய் மூகாம்பிகை (1982).
  • நதியில் ஆடும் பூ - வானம்.
  • நான் பாட வருவாய் - உதிரிப் பூக்கள் 1979.
  • காற்றில் வரும் கீதமே - ஒரு நாள் ஒரு கனவு (2005).
"https://ta.wikipedia.org/w/index.php?title=மேசகல்யாணி&oldid=3765628" இலிருந்து மீள்விக்கப்பட்டது