பத்மநாபபுரம்
பத்மநாபபுரம் (Padmanabhapuram), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கல்குளம் வட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும்.
பத்மநாபபுரம் | |
ஆள்கூறு | 8°14′41″N 77°20′12″E / 8.244600°N 77.336700°E |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | கன்னியாகுமரி |
வட்டம் | கல்குளம் |
ஆளுநர் | ஆர். என். ரவி[1] |
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] |
மாவட்ட ஆட்சியர் | ஆர். அழகுமீனா, இ. ஆ. ப |
நகராட்சி தலைவர் | சத்யதேவி |
மக்கள் தொகை | 21,342 (2011[update]) |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
பரப்பளவு • உயரம் |
• 66 மீட்டர்கள் (217 அடி) |
வரலாறு
தொகுபத்மநாபபுரம் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் பழைய தலைநகரம். 1795-இல் திருவிதாங்கூர் மன்னரான ராமவர்மா தலைநகரை பத்மநாபபுரத்தில் இருந்து திருவனந்தபுரத்திற்கு மாற்றினர்.
புவியியல்
தொகுஇவ்வூரின் அமைவிடம் 8°14′41″N 77°20′12″E / 8.244600°N 77.336700°E ஆகும்.[3] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 66 மீட்டர் (217 அடி) உயரத்தில் இருக்கின்றது.
மக்கள்தொகை பரம்பல்
தொகு2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 21 நகராட்சி மன்ற உறுப்பினர்களையும், 5,549 குடும்பங்களையும் கொண்ட இந்நகரத்தின் மக்கள்தொகை 21,342 ஆகும். அதில் 10,518 ஆண்களும், 10,824 பெண்களும் உள்ளனர். இந்நகரத்தின் எழுத்தறிவு 93.2% மற்றும் பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு, 1,029பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 2120 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 956 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 2,264 மற்றும் 1 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 60.4% , இசுலாமியர்கள் 20.65%, கிறித்தவர்கள் 18.85% மற்றும் பிறர் 0.08% ஆகவுள்ளனர்.[4]
சுற்றுலா
தொகுதிருவிதாங்கூர் மன்னர்களின் பழைய அரண்மனையான பத்மநாபபுரம் அரண்மனை இவ்வூரின் முக்கியமான சுற்றுலாத் தலமாகும். நுட்பமான மரவேலைப்பாடுகளைக் கொண்டுள்ள இவ் அரண்மனை ஆறு ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.
மேலும் பார்க்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "Padmanabhapuram". Falling Rain Genomics, Inc. பார்க்கப்பட்ட நாள் அக்டோபர் 20, 2006.
- ↑ நகரத்தின் மக்கள்தொகை பரம்பல்