சுதுமலை முருகமூர்த்தி கோயில்

அமைவிடம் தொகு

 
சுதுமலை ஸ்ரீமுருகமூா்த்தி ஆலயம்

யாழ்ப்பாணத்திலிருந்து 6கிலோமீற்றர் தூரத்தில்உள்ளது சுதுமலை.சுதுமலை ஸ்ரீ முருகமூர்த்தி ஆலயத்தை சென்றடைவதற்கு யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வீதியால் சென்று தாவடி மானிப்பாய் வீதியால் திரும்பி 1கீமீதூரம் போய் இக்கோயிலை அடையலாம். ஆலயத்தின் வடக்குப் பகுதியில்அருள்மிகு விசாலாட்சிசமேத விஸ்வநாதர் ஆலயமும் ,அருள்மிகு ஸ்ரீபுவனேஸ்வரி அம்பாள் கோவிலும் , கண்ணகை  அம்மன் களைதீர்த்த  இடமென கருதப்படும் தங்குசங்களையம் , கிழக்குப் பக்கத்தில் அருள்மிகு புட்டிவைரவர் ஆலயமும் அமைந்துள்ளன. இவ்வாலய தெற்கு பக்கத்தில் தாவடி – மானிப்பாய் வீதி அமைந்துள்ளது. இக்கோயில் அமைந்துள்ள இடம் வேலன்கண்டடி என பதியப்பட்டுள்ளது. 

வரலாறு தொகு

1800ம் ஆண்டு சுதுமலை கதிர்காமர் சுவாமிநாதன் என்பவரால் மண்ணினால் கட்டி ஓலையினால் வேயப்பட்டது.1800ம் ஆண்டு சுதுமலையில் உள்ள மாதவர் முருகேசர் இன்னொரு கோவிலை அதே இடத்தில் கல்லால் கட்ட ஆரம்பித்து ஆனால் கட்டி முடிப்பதற்கு முன்னர் அவர் காலமாகிவிட்டார்.1877ம் ஆண்டு இத் திருப்பணியை செய்வதற்கு சுதுமலை வாசியான கதிர்காமர் நாகநாதர் முயற்சியெடுத்தார்.இக் கோவிலது முகாமையாளர் ஆனைக்கோட்டையிலுள்ள சிதம்பரநாதர் ஆவார். 1877ம்ஆண்டு இக் கோவிலில் திருவிழாக்கள் நடைபெறுவதில்லை என்றும் பக்தர்கள் திரண்டு வருவதில்லை என்றும் நித்தியபூசை ஒரு நாளைக்கு ஒருமுறை நடைபெற்றதாகவும் அச்சமயம் கோவிலின்  கட்டட பெறுமதி ரூபா75 ,அசையும் சொத்தின் பெறுமதி ரூபா 30 , அசையாச் சொத்தின் பெறுமதி ரூபா 50 எனவும் பூசை நிகழ்த்துவதற்குரிய பெருட்களின் பெறுமதி 12 சதம் என்றும் மேற்குறித்த விபரம் யாவும் வலிகாமம் மேற்கு பதில் மணியகாரன் திருஎ.வேலுப்பிள்ளை 1883ம் ஆண்டு அரசாங்க அதிபருக்கு அனுப்பிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன. 1833ம் ஆண்டிற்கு முன்னர் எப்பொழுது பாலஸ்தாபனம் செய்து மகாகும்பாபிஷேகம் நடைபெற்று திருவிழாக்கள் நடைபெற ஆரம்பித்தன என அறிய முடியாமல் உள்ளது. ஆனால் இக்கோவிலின் வடக்குப் பக்கத்தில்  அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீபுவனேஸ்வரி அம்மாள் கோவிலில் மகோற்சவம் நடைபெறும் போது அம்பாளுடன் முருகமூர்த்தி கோவிலின் சுவாமியும் வலம் வந்ததாக அறிய முடிகின்றது. இவ் வழக்கம் தற்சமயம் இல்லை.இவ் ஆலயம் 1975ம் ஆண்டு பாலஸ்தாபனம் செய்யப்பெற்று 06.06.1985 இல் மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது.அன்று தொடக்கம் நித்தியபூசைகளாக இரு நேரபூசைகள் நடைபெறுகின்றன.

இவ்வாலய அமைப்பினை நோக்கும் போதுகருவறை ,அர்த்தமண்டபம், மகாமண்டபம், நயனமண்டபம் , ஸ்தம்பமண்டபம் என்பவற்றை கொண்டதாக அமையப்பட்டுள்ளது. ஸ்தம்பமண்டபத்தில் மயில் பலிபீடம் ஸ்தம்பம் ,ஸ்தம்ப விநாயகர்  ஆகிய அமைந்துள்ளன. தென்மேற்கு பக்கத்தில் வாகனசாலையும் அமையப்பெற்றுள்ளது. வடக்கே வசந்தமன்டபமும் அதன் கிழக்கே யாகசாலையும் வைரவர்சந்நிதியும் மணிக்கூட்டுகோபுரமும் அமைந்துள்ளது. இவ்வாலயத்தில் நித்தியபூசையாக காலை மாலை என இருவேளை நடைபெறுகின்றது. வருடப்பிறப்பு தீபாவளி ,கந்தசஷ்டி, கார்த்திகைநோன்பு, திருவெம்பாவை , தைப்பொங்கல் என்பன நடைபெறுகின்றன. மாசிமாத புரணையன்று தீர்த்ததிருவிழா நடைபெறும் முகமாக 10நாட்கள் கொண்ட மகோற்சவ திருவிழா நடைபெறுகின்றது.

சுதுமலை மத்தியில் மிகவும் பழமை வாய்ந்த ஆலயமாகும். பல ஆண்டுகளுக்கு முன்பு ஆலய அர்ச்சகரும் ஆலய ஏகதர்மகர்தாவுமான பிரம்ம ஸ்ரீஅப்பாத்துரை ஐயா அவர்களால் நித்தியகருமங்கள் நிறைவேற்றப்பட்டன. அவரது மறைவுக்குப் பின் ஆலய நித்திய கருமங்கள் கட்டிட பராமரிப்புக்கள் முதலிய செயற்பாடுகளைக் கவனிக்க யாருமின்றி நீண்டகாலம் பாழடைந்து புதர்சூழ்ந்து தேடுவாரற்ற நிலையிலிருந்தது. சுதுமலையைச் சேர்ந்த சமயத் தொண்டரும் சிறந்த சமூகசேவகருமான ஓய்வு பெற்ற கூட்டுறவுப் பரிசோதகர் அமரர் திருமுத்துத்தம்பி இராமநாதன் அவர்களின் முயற்சியும் ஊரார்களின் ஒத்துழைப்புடனும் இளைஞர்களின் முயற்சியுடனும் திருப்பணிசபை ஒன்று உருவாக்கபட்டு ஆலய புனருத்தாரணம் ஆரம்பிக்கப்பட்டது. 1985ம்ஆண்டு கோவில் புதுப்பொலிவு பெற்று மகாகும்பாபிஷேகம் இடம்பெற்றது.  பிரம்ம ஸ்ரீ அப்பாத்துரை ஐயா அவர்களின் தம்பி ஐயாத்துரை ஐயர் அவருடைய மகன் இரத்தினக்குருக்கள் அவருடைய மகன் நாகேஸ்வரசர்மா என பரம்பரையாக ஆலயத்தின் கிரியைகளை நிறைவேற்றி வருகின்றனர். 1985இலிருந்து ஆலய நித்திய நைமித்திய கருமங்கங்களை பிரம்ம ஸ்ரீநாகேஸ்வரசர்மா செவ்வனே நிறைவேற்றினார் தற்போது பிரம்ம ஸ்ரீநாகேஸ்வரசர்மாவின் மகன் ஜனார்த்தன சர்மா செவ்வனே செய்து வருகின்றார்.

1987ம் ஆண்டு நாட்டில் ஏற்பட் அசாதாரண சூழ்நிலை காரணமாக கோயில் பலத்த சேதத்திற்குள்ளானது.  மீண்டும் 1988ம் ஆண்டுபு னருத்தாரணம் செய்யப்பட்டது. 1999 பாலஸ்தாபனம் செய்யப்பட்டு புதிதாக வசந்தமண்டபம், வாகனசாலை, உள்வீதி கொட்டகை என்பன அமைக்கப்பெற்றன. 2008 ம்ஆண்டு முதல் மகோற்சவம் ஆரம்பமாகி மிகச் சிறப்பாக நடைபெற்று வருகின்றது. ஆலயத்தின் ஸ்கந்தஷஷ்டி உற்சவம் ஒவ்வொரு வருடமும் மிகச்சிறப்பாக நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

விசேடதினங்கள் தொகு

''''ஒவ்வொருமாதமும் கார்த்திகை உற்சவம்.'''' 

''''தைப்பொங்கல்'''' ''''பட்டிப்பொங்கல்'''' ''''தைப்பூசம்''''

''''மாசி பௌர்ணமியை தீர்த்தஉற்சவமாக கொண்ட 10 நாள் வருடாந்த மகோற்வம்.''''

''''சித்திரை வருடப்பிறப்பு'''' ''''ஆடிசெவ்வாய்'''' ''''ஆடிஅமாவாசை'''' ''''ஆவணிமூலம்'''' ''''ஆவணிஞாயிறு'''' ''''நவராத்திரி'''' ''''தீபாவளி'''' ''''ஐப்பசிவெள்ளி,'''' ''''ஸ்கந்தஷஷ்டி'''' ''''திருக்கார்த்திகை'''' ''''திருவெம்பாவை''''


உசாத்துணை தொகு

  • ஈழத்து ஆலயங்கள் (யாழ் மாவட்ட திருத்தலங்கள் - பாகம் - 01) நூலிலிருந்து ”வை.சோமசேகரன்” அவர்களது கட்டுரை.
  • அகில இலங்கை இந்து மாமன்றத்தின் நூலிலிருந்து.