சுதுமலை

இலங்கையில் உள்ள இடம்

சுதுமலை (Suthumalai) இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு ஊராகும். இது யாழ் நகரிலிருந்து 6 கிலோ மீட்டர் தொலைவிலுள்ளது. இதன் எல்லைகளாக உடுவில், இணுவில், மானிப்பாய், தாவடி ஆகிய ஊர்கள் அமைந்துள்ளன. 2012 கணக்கெடுப்பின்படி, இங்கு 3,770 பேர் வாழ்கின்றனர்.[1]

சுதுமலை
ஊர்
சுதுமலை is located in Northern Province
சுதுமலை
சுதுமலை
ஆள்கூறுகள்: 9°43′0″N 80°00′0″E / 9.71667°N 80.00000°E / 9.71667; 80.00000
நாடுஇலங்கை
மாகாணம்வடக்கு
மாவட்டம்யாழ்ப்பாணம்
பி.செ. பிரிவுவலிகாமம் தென்-மேற்கு

இந்தக் கிராமத்தில் புகழ்பெற்ற சுதுமலை புவனேசுவரி அம்மன் கோயில் உட்படப் பல சைவக் கோவில்கள் உள்ளன.[2][3] சிந்மய பாரதி வித்தியாலயம் மற்றும் இரு அரசினர் பாடசாலைகளையும் கொண்டமைந்துள்ளது. இதில் சிந்மய பாரதி வித்தியாலயம் ஆனது 1882 ஆம் ஆண்டு, சிந்மய பிள்ளை என்னும் வள்ளலினால் சைவப் பிள்ளைகளுக்காக கட்டப்பட்டதாகும். இந்த ஊரில் எழில் கொஞ்சும் வயல்களும் குளங்களும் காணப்படுகின்றன.

சுதுமலையில் 1987 ஆகத்து 4 அன்று தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்களிடம் உரையாற்றி புலிகளின் நிலைப்பாட்டை விளக்கினார். இலங்கை தமிழ் தேசியவாதத்தில் இந்த "சுதுமலைப் பிரகடனம்" ஒரு வரலாற்றுத் திருப்புமுனையாகும்.[4][3]

இங்குள்ள கோவில்கள் தொகு

சுதுமலையின் புகழ் பூத்தோர் தொகு

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுதுமலை&oldid=3743497" இருந்து மீள்விக்கப்பட்டது