சுந்தரராஜத் தேவர்
சுந்தரராஜத் தேவர் தமிழ்நாட்டில் விருதுநகர் மாவட்டத்திலுள்ள சேத்தூர் ஜமீனை ஆட்சி செய்தவர்.
பிறப்பு
தொகுசேத்தூர் ஜமீனை கி.பி.1847 முதல் கிபி 1875வரை ஆட்சி செய்த முத்துச்சாமித் தேவரின் மகன் சுந்தரராஜத் தேவர் ஆவார். இவர் நல்ல தமிழ்ப் புலமை கொண்டவர். எண்ணற்ற தமிழ்ப் புலவர்களை ஆதரித்தவராவார். "காவடிச்சிந்து' எழுதிய அண்ணாமலை ரெட்டியார் அவைக்களப் புலவராக வைத்திருந்தவர். இவரால் ஆதரிக்கப்பெற்ற புலவர்களுள் முகவூர் இராமசாமிக் கவிராயர், மீனாட்சிசுந்தரக் கவிராயர், எட்டிச்சேரி திருமலைவேலுக் கவிராயர், வேம்பத்தூர் பிச்சுவையர் முதலியோர் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர்.[1]
படைப்புகள்
தொகுகவிதைகள்
தொகுஇவருடைய பாடல்கள் பல "தனி செய்யுட் சிந்தாமணி' நூலில் காணப்பெறுகின்றன. இவர், தேவதானம் அருள்மிகு நச்சாடை தவிர்த்த ஈசனார் மீது ஒரு பதிகம் பாடியுள்ளார். தேவதானம் பெரியகோயில், கோயில் திருவிழா, திருவாதிரைத் திருவிழா மற்றும் பல ஆலயங்கள் பற்றியும் கவிதைகள் புனைந்துள்ளார். [1]
நூல்கள்
தொகு- துறைக்கோவை
- பதிகப்பாமாலை
- திருவாங்கூர் மன்னர் இராசவர்மா மீது பாடிய வண்ணம் (இந்நூலுக்கு மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை சிறப்புப் பாயிரம் எழுதியுள்ளார்.[1]
- சேறைத் தலபுராணம் (மறுபதிப்பு-1893)
இறப்பு
தொகு1896-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 24-ஆம் நாள் மரணமடைந்தார். [1]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 என்.நவநீத கிருஷ்ணராஜா, செந்தமிழ்க்காவலர், தினமணி, தமிழ்மணி, 22.2.2015