சுந்தரவதி நாவல் பிரபாகர்
சுந்தர்வதி நாவல் பிரபாகர் (1922-2010) தில்லியைச் சேர்ந்த இந்தியத் தேசிய காங்கிரசு அரசியல்வாதி ஆவார். இவர் எட்டாவது மக்களவையில் கரோல் பாக் மக்களவை உறுப்பினராக இருந்தார்.
ஆரம்ப கால வாழ்க்கை
தொகுசுந்தர்வதி 1922ஆம் ஆண்டு செப்டம்பர் 9 ஆம் தேதி தில்லியில் பிறந்தார். பல்கலைக்கழக நுழைவு தகுதி முன் வரை கல்வி பயின்றார்.[1]
தொழில்
தொகுசுந்தர்வதி இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு 1942 வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்றார்.[2] இவர் சீன-இந்தியப் போர் (1962) மற்றும் 1965இன் இந்திய-பாக்கித்தான் போரின் போது பாதுகாப்பு நிதி வழங்க முன்வந்தார். இவரது சமூக சேவையைப் பாராட்டி, அப்போதைய இந்தியப் பிரதமரால் இவருக்குக் கேடயம் வழங்கப்பட்டது. சுந்தர்வதி தில்லி பட்டியலிடப்பட்ட சாதிகள் நிதி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின் இயக்குநராகவும், 1972-80 மற்றும் 1982-84 வரை தில்லி பெருநகர சபை உறுப்பினராகவும் இருந்தார். இவர் 1980 இந்தியப் பொதுத் தேர்தலில் கரோல் பாக் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று எட்டாவது மக்களவையில் உறுப்பினராகச் செயல்பட்டார்.[1]
சுந்தர்வதி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த காலத்தில், தனியார் உறுப்பினர்களின் மசோதாக்கள் மற்றும் தீர்மானங்களுக்கான குழுவில் பணியாற்றினார். தில்லியில் உள்ள சிவாஜி கல்லூரி மற்றும் சமூக நல வாரியத்தின் நிர்வாகக் குழுவின் உறுப்பினராகவும் இருந்தார்.[2]
தனிப்பட்ட வாழ்க்கை
தொகுசுந்தர்வதி 1936-ல் இந்தியத் தேசிய காங்கிரசு அரசியல்வாதி நாவல் பிரபாகரை மணந்தார். இந்த இணையருக்கு எட்டு குழந்தைகள் பிறந்தனர்.[1] இவர் 24 மார்ச் 2010 அன்று தில்லியில் இறந்தார்.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 "Members Bioprofile: Nawal Prabhakar, Shrimati Sundarwati". Lok Sabha. பார்க்கப்பட்ட நாள் 27 November 2017.
- ↑ 2.0 2.1 2.2 "The Speaker made references to the tragic demise of Mr. Lech Kaczynski". IndiaKanoon.org. 15 April 2010. பார்க்கப்பட்ட நாள் 27 November 2017.