சுந்தர் தியோதர்
இறகுப்பந்தாட்ட வீராங்கனை
சுந்தர் தியோதர் (Sunder Deodhar) இந்தியாவைச் சேர்ந்த ஒரு பெண் இறகுப்பந்து வீராங்கனையாவார். இந்தியாவின் துடுப்பாட்ட விளையாட்டு வீரர் திங்கர் பல்வந்து தியோதரின் மகளாகவும் இவர் அறியப்படுகிறார். பட்வர்தன் என்பவரை திருமணம் செய்து கொண்டார் என்பதால் இவர் சுந்தர் பட்வர்தன் என அழைக்கப்பட்டார்.
தொழில்
தொகுசுந்தர் தியோதர் தனது சகோதரி தாரா தியோதருடன் இணைந்து 1942 ஆம் ஆண்டு இறகுப்பந்தாட்டப் பெண்கள் இரட்டையர் பிரிவில் தனது முதல் தேசிய பட்டத்தை வென்றார். 1942 மற்றும் 1954 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் தியோதர் சகோதரிகள், சுமன், சுந்தர் மற்றும் தாரா ஆகியோர் இந்திய தேசிய இறகுப்பந்து வெற்றியாளர் போட்டிகளின் அனைத்துப் பிரிவுகளிலும் ஆதிக்கம் செலுத்தினர்.[1][2] 1946 ஆம் ஆண்டு சபல்பூரில் நடைபெற்ற தேசிய விளையாட்டுப் போட்டிகளில் சுந்தர் தியோதர் மூன்று பட்டங்களை வென்றார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ Badminton Association of India. "List of Indian National Championship Winners". Archived from the original on 26 ஆகஸ்ட் 2014. பார்க்கப்பட்ட நாள் 22 August 2014.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ Sports Team (13 March 2011). "The Other Trailblazers". தி இந்து. http://www.mid-day.com/articles/the-other-trailblazers/115245. பார்த்த நாள்: 22 August 2014.