சுனிதா காம்ப்ளி

இந்திய கால்நடை மருத்துவர்

சுனிதா காம்ப்ளி (Sunita Kamble) 2017 ஆம் ஆண்டு இந்தியாவை மாற்றும் பெண்கள் விருதுக்காக அங்கீகரிக்கப்பட்ட ஓர் இந்திய கால்நடை மருத்துவர் ஆவார். ஆடு வளர்த்தலில் இவர் நிபுணத்துவம் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. [1][2][3] வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள மகாராட்டிர மாநிலத்தின் மாசுவத் என்ற பழமையான நகரத்தைச் சேர்ந்தவர் காம்ப்ளி . ஆடுகள் இங்கு முக்கிய பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருந்தன. பயிற்சி பெற்ற கால்நடை மருத்துவர்களின் பற்றாக்குறை காரணமாக ஆடுகள் நோய்வாய்ப்பட்டால் பொருத்தமான மற்றும் சரியான நேரத்தில் கவனிப்பைப் பெறுவது இங்கு கடினமாக இருந்தது. இவர் மான் தேசி அறக்கட்டளையின் "பாரா-வெட் ஆடு என்ற ஆடு கால்நடை மருத்துவ உதவியாளர் திட்டத்தில் பயிற்சி பெற்று இப்பகுதியில் முதல் ஆடு கால்நடை மருத்துவராக ஆனார். [4] ஏழு நபர்கள் கொண்ட வெறுங்கால் கால்நடை மருத்துவர்கள் என்ற குழுவை வழிநடத்தினார். பால் மற்றும் இறைச்சி இரண்டிற்கும் ஆடுகளின் இனப்பெருக்கத்தை மேம்படுத்துவதற்காக ஒரு செயற்கை கருவூட்டல் சேவையை அறிமுகப்படுத்தினார். 350 பெண்களுக்கு ஆடுகள் வளர்க்கும் இந்நுட்பத்தில் பயிற்சியும் அளித்துள்ளார். இப்பகுதியில் உள்ள பெண்கள் தலைமையிலான குடும்பங்களுக்கு ஆடுகள் மாற்று மற்றும் நிலையான வாழ்வாதார விருப்பமாக காணப்படுகின்றன. இவரது பணிகள் 2017 ஆம் ஆண்டில் இந்தியாவை மாற்றும் பெண்கள் விருதுக்காக அங்கீகரிக்கப்பட்டன. [2]

காம்ப்ளி தலித் அல்லது தீண்டத்தகாத குழுவைச் சேர்ந்தவராவார். ஆனால் இவரது சாதனைகள் இவரது கிராமத்தில் உள்ள பல்வேறு சாதிகளைச் சேர்ந்தவர்களை ஒன்றிணைத்துள்ளன: ”நான் கிராமத்திற்குள் நுழைந்தபோது, சுனிதாவின் பெரிய ஆளுருவ படத்தை அங்கு கண்டேன். அந்தப் படத்தில் சுனிதா சிரித்துக் கொண்டிருந்தாள். உயர் சாதி தலைவர்கள், ஆண்கள் - அவரது வீட்டில் அமர்ந்திருந்தனர் " என்று இந்திய சமூக சேவகர் சேட்னா காலா சின்கா தன்னுடைய சொற்பொழிவில் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். [5]

மேற்கோள்கள் தொகு

  1. "Niti Aayog awards 12 women for 'transforming India'". Economic Times. 29 August 2017. https://economictimes.indiatimes.com/news/economy/policy/niti-aayog-awards-12-women-for-transforming-india/articleshow/60281525.cms?from=mdr. பார்த்த நாள்: 9 March 2019. 
  2. 2.0 2.1 "Backgrounder: Inspiring Stories - Women Transforming India Awards, 2017". NewKerala.com. 29 August 2017. http://www.newkerala.com/news/fullnews-267600.html. பார்த்த நாள்: 9 March 2019. 
  3. "Women achievers open paths to achieve what was perceived as impossible". Hindustan Times. 8 September 2017. https://www.hindustantimes.com/columns/women-achievers-open-paths-to-achieve-what-was-perceived-as-impossible/story-XNadFaRkOAkQocDrTKP27K.html. பார்த்த நாள்: 9 March 2019. 
  4. "Empowering Women Entrpreneurs and their Communities". Mann Deshi Foundation. பார்க்கப்பட்ட நாள் 17 March 2019.
  5. Sinha, Chetna Gala. "How women in rural India turned courage into capital: TED2018". TED. பார்க்கப்பட்ட நாள் 17 March 2019.

புற இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுனிதா_காம்ப்ளி&oldid=3604839" இலிருந்து மீள்விக்கப்பட்டது