சுனிதா கிருட்டிணன்

இந்திய சமூக செயற்பாட்டாளர்

முனைவர் சுனிதா கிருட்டிணன் (Sunitha Krishnan, பிறப்பு: 1972) ஒர் இந்திய சமூக செயற்பாட்டாளர். இவர் பாலியல் வன்முறைக்கும் அடிமைத்தனத்துக்கும் உட்பட்ட சிறுவர்களை, பெண்களை காப்பாற்றி அவர்களுக்கு புனர்வாழ்வு வழங்கும் பிராஜ்வாலா என்ற அமைப்பின் இணைய அமைப்பாளர், முதன்மைச் செயற்பாட்டாளர். இந்த அமைப்பு 5000 வரையான எயிட்சு நோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு கல்வி உதவிகளையும் வழங்குகிறது. இவர் இந்திய ரெட் பேச்சுக்கள் நிகழ்வில் வழங்கிய உரை மிகுந்த வரவேற்பைப் பெற்றது.

முனைவர் சுனிதா கிருட்டிணன்
சுனிதா கிருட்டிணன்
படித்த கல்வி நிறுவனங்கள்மங்களூர் பல்கலைக்கழகம்
பணிபிராஜ்வாலா அமைப்பின் நிறுவனர்
அறியப்படுவதுசமுக செயற்பாட்டாளர்

கொலை முயற்சி மற்றும் மிரட்டல்கள்

தொகு

இவர் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்ட பல பெண்கள் மற்றும் சிறுவர்களின் புனர்வாழ்வு வழிவகுத்ததால் இவர் மீது 14 முறை  கொலை வெறி தாக்குதல்கள் மற்றும் மிரட்டல்கள் இடம்பெற்றுள்ளன.[1] இவர் ஒரு முறை ஆட்டோ ரிக்சாவில் செல்லும் பொது ஒரு சுமோ வாகனம் ஆட்டோவின் மீது மோதி கொலை முயற்சி நடைபெற்றது. அந்தத் தாக்குதலில் படுகாயத்துடன் உயிர் தப்பியதாக அவர் கூறி இருக்கிறார்.[2]

சுனிதாவின் கூற்றுக்கள்

தொகு
  • "இந்த சிக்கலுக்கு நீங்கள் எவ்வாறு தீர்வுகளைத் தர முடியாது என்று நூறு காரணங்களைக் கூறாதீர்கள், இந்த சிக்கலை தீர்க்க உதவும் உங்களுக்குத் தெரிந்த ஒரு வழிக்கு உங்கள் ஆற்றலைப் பயன்படுத்துவீர்களாக." - "Don't tell me hundred ways how you cannot respond to this problem, can you apply your mind for that one way that you can respond to that problem."

மேற்கோள்கள்

தொகு
  1. "She battles on". The Deccan Herald.
  2. "India's Sex Industry: She saves the innocent and pursues the guilty". Reader’s Digest Asia. Archived from the original on 2016-08-22. பார்க்கப்பட்ட நாள் 2010-09-14.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுனிதா_கிருட்டிணன்&oldid=3670242" இலிருந்து மீள்விக்கப்பட்டது