சுனிதா சரவாகி

சுனிதா சரவாகி (Sunita Sarawagi) என்பவர் இந்தியக் கணினி அறிவியலாளர். இவர் தரவுத்தளம், தரவு அகழ்தல் மற்றும் இயந்திர கற்றல் பிரிவில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இதில் இயற்கை மொழி முறையாக்கத்தில் வார்த்தைகளிலிருந்து அமைப்பு தரவுகளை உருவாக்கி வருவதில் ஆய்வு மேற்கொள்கிறார். இவர் மும்பை இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் கணினி அறிவியல் மற்றும் பொறியியல் நிறுவன பேராசிரியராக உள்ளார்.[1]:{{{3}}}

கல்வி மற்றும் பணி

தொகு

சரவாகி 1991-இல் காரக்பூரில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் கணினி அறிவியலில் இளநிலைப் பட்டம் பெற்றார். இவர் கலிபோர்னியா பல்கலைக்கழகம், பெர்க்லியில் தரவுத்தள நிபுணரான மைக்கேல் ஸ்டோன்பிரேக்கருடன் கணினி அறிவியலில் பட்டதாரி படிப்பிற்காகச் சென்றார், 1993-இல் முதுநிலைப் பட்டம் பெற்றார் சரவாகி, 1996-ல் தனது முனைவர் பட்ட ஆய்வினை முடித்தார். இவர் பெரிய பல பரிமாண வரிசைகளின் திறமையான அமைப்பு மற்றும் மூன்றாம் நிலை நினைவக தரவுத்தள வினவல் செயலாக்கத்தில் முனைவர் பட்டம் பெற்றார்.[2]:{{{3}}}[3]:{{{3}}}

கலிபோர்னியாவின் சான் ஓசே பல்கலைக்கழக, அல்மேடன் ஆராய்ச்சி மையத்தில் ஐ.பி.எம். ஆராய்ச்சிக்காக ஆராய்ச்சியாளராகப் பணிபுரிந்த பிறகு, 1999-இல் மும்பையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் உதவிப் பேராசிரியரானார். இவர் 2003-இல் இணைப் பேராசிரியராகவும், 2014-இல் பேராசிரியராகவும் பதவி உயர்வு பெற்றார். 2020 முதல் இவர் இயந்திர நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியல் மையத்தின் தலைவராக உள்ளார்.[2]:{{{3}}}

அங்கீகாரம்

தொகு

சரவாகி 2019-இன் பொறியியல் மற்றும் கணினி அறிவியலுக்கான இன்போசிஸ் பரிசை "தரவுத்தளம், தரவுத் தேடல், இயந்திர கற்றல் மற்றும் இயற்கை மொழி செயலாக்கம் மற்றும் ஆராய்ச்சி நுட்பங்களின் முக்கியமான பயன்பாடுகளுக்காக" இந்த விருது வழங்கப்பட்டது.[1]:{{{3}}} இதே ஆண்டில், காரக்பூர் இந்திய தொழில்நுட்பக் கழகம், இவருக்குச் சிறப்பு மிக்க முன்னாள் மாணவர் விருதை வழங்கியது.[1]:{{{3}}}[2]:{{{3}}} மும்பையிலுள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் பேராசிரியர் ஹெச். ஹெச். மாத்தூர் பயன்பாட்டு அறிவியல் சிறப்பு விருதினை வழங்கியது.[2]:{{{3}}}

சரவாகி 2013-இல் இந்திய தேசிய பொறியியல் அகாதமி சகாவாக ஆனார்.[2]:{{{3}}} மேலும் 2021 கணிமைப் பொறிகளுக்கான சங்கம் சகாவாக ”தகவல் பகுப்பாய்வு, பிரித்தெடுத்தல் மற்றும் ஒருங்கிணைப்புக்கான புள்ளிவிவர இயந்திர கழற்றலுக்கான” பங்களிப்புகளுக்காக பங்களிப்புகளுக்காகத்.[4]:{{{3}}}

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 "Engineering and Computer Science, 2019: Sunita Sarawagi", Infosys Prize Laureates, Infosys Limited, பார்க்கப்பட்ட நாள் 2022-01-21
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 Curriculum vitae (PDF), பார்க்கப்பட்ட நாள் 2022-01-21
  3. கணித மரபியல் திட்டத்தில் சுனிதா சரவாகி
  4. ACM Names 71 Fellows for Computing Advances that are Driving Innovation, Association for Computing Machinery, January 19, 2022, பார்க்கப்பட்ட நாள் 2022-01-19

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுனிதா_சரவாகி&oldid=3884770" இலிருந்து மீள்விக்கப்பட்டது