சுனில் பி. இளயிடம்

மலையாள எழுத்தாளர்

சுனில் பி. இளயிடம் மலையாள மொழியில் எழுதும் ஒரு சிறந்த இந்திய எழுத்தாளர். இவர் விமர்சகரும் பேச்சாளரும் ஆவார். அவர் அரசியல், இலக்கியம், கலை, பண்பாடு ஆகியன குறித்து எழுதுகிறார். இவர் கேரளா சாகித்திய அகாடமி விருது பெற்றவர்[1].[1]

வாழ்க்கை வரலாறு தொகு

தென்னிந்திய மாநிலமான கேரளாவில் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள கொட்டுவலில் அமைந்துள்ள ஒரு கிராமத்தில் 1962 இல் பிறந்தார் சுனில் பி. இளயிடம். இவர் தனது கிராமத்திலிருந்த உயர் தொடக்கப்பள்ளியிலும் சேரையிலிருந்த ராம வர்மா யூனியன் உயர்நிலைப் பள்ளியிலும் பயன்றார். பின்னர், அவர் மலையகாரர் ஸ்ரீ நாராயண மங்கலம் கல்லூரியிலும் எர்ணாகுளத்திலுரள்ள மஹாராஜா கல்லூரியிலும் கல்லூரிப் படிப்பை நிறைவு செய்தார். தொடக்கத்தில் பரவூரில் உள்ள லட்சுமி கல்லூரியில் விரிவுரையாளராகப் பணிபுரிந்தார். பின்னர் அவர் தேசாபிமானி மலையாள நாளிதழில் துணை ஆசிரியராகப் பணியாற்றினார், மேலும் முனைவர் பட்டம் (பிஎச்.டி) பெற்ற பிறகு, ஸ்ரீ சங்கராச்சாரி சமஸ்கிருத பல்கலைக்கழகத்தில் மலையாளத் துறையில் இணைப் பேராசிரியராகப் பொறுப்பேற்று பணிசெய்து வருகிறார்.[2] பரணிடப்பட்டது 2019-01-19 at the வந்தவழி இயந்திரம்

நூல்கள் தொகு

கலை விமர்சனம், இலக்கிய விமர்சனம், வரலாறு, மார்க்சிசம், பண்பாடு ஆகியன குறித்து பல புத்தகங்களை அவர் வெளியிட்டுள்ளார்.

கண்வாழிகள் Kanvazhikal, காழ்ச்சவட்டங்கள் Kazhchavattangal, உரியாட்டம் Uriyattom, அனுபூதிகளுடெ சரித்திர ஜீவிதம் Anubhuthikalude Charithra Jeevitham, நானார்த்தங்கள்; சமூகம், சரித்திரம், சம்ஸ்காரம் Nanarthangal: Samooham, Charithram, Samskaram ஆகியன அவரது முக்கிய படைப்புகள். மகாபாரதத்தின் கலாச்சார வரலாற்றின் ஐந்து பகுதி விரிவுரைத் தொடர், சபரிமலை ஆச்சாரங்கள் உட்பட பல விரிவுரைகளை அவர் அளித்திருக்கிறார்.

விருதுகள் தொகு

இவரது கலை விமர்சனப் பங்களிப்பினைப் போற்றி, கேரள சாகித்திய அகாதெமி 2013ஆம் ஆண்டு கேசரி பாலகிருஷ்ணபிள்ளை புரஸ்காரம் விருது வழங்கிச் சிறப்பித்துள்ளது.[3] 2004ஆம் ஆண்டு கேரள லலித்கலா அகாதெமி விருதும் 2006ஆம் ஆண்டு கேரள சாகித்திய அகாதெமி விருதும் பெற்றுள்ளார். 2008ஆம் ஆண்டு அபுதாபி சக்தி தியேட்டர்ஸ் அமைப்பு தாயட்டு விருதினை வழங்கிச் சிறப்பித்துள்ளது. SBT விருது, பாவண்ணன் விருது, கேசரி பாலகிருஷ்ணபிள்ளை விருது, வி.கே.உன்னிகிருஷ்ணன் நினைவு விருது, குருதர்சனா விருது ஆகிய விருதுகளையும் பெற்றுள்ளார்.[4] பரணிடப்பட்டது 2019-01-19 at the வந்தவழி இயந்திரம்

குடும்பம் தொகு

இவருடைய மனைவி பெயர் மீனா. இவர்களுக்கு ஜானகி, மாதவன் என்று இரண்டு குழந்தைகள் . கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் கோட்டவளையில் இவர் தன் குடும்பத்துடன் வாழ்கின்றார்.

மேற்கோள்கள் தொகு

  1. "Akademi awards announced". The Hindu. 19 January 2011.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுனில்_பி._இளயிடம்&oldid=3245369" இலிருந்து மீள்விக்கப்பட்டது