சுன் வான் மாவட்டம்
சுன் வான் மாவட்டம் (Tsuen Wan District) என்பது ஹொங்கொங்கின் அரசியல் நிலப்பரப்புக்குள் உள்ள பதினெட்டு (18) மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டம் புதிய கட்டுப்பாட்டகம் பகுதியில் உள்ளது. எம்டிஆர் சுன் வான் தொடருந்து சேவையின் கடைசி தொடருந்தகத்தை இம்மாவட்டம் கொண்டுள்ளது. 2006 ஆம் ஆண்டின் கணிப்பின் படி 288,728 பேர் மக்கள் தொகையை இம்மாவட்டம் கொண்டுள்ளது. புதிய கட்டுப்பாட்டகத்தில் உள்ள ஏனைய மாவட்டங்களுடன் ஒப்பிடுகையில் அதிக வருமானம் ஈட்டுவோரைக் கொண்ட மாவட்டமாக இம்மாவட்டம் விளங்குகின்றது.
சுன் வான் மாவட்டம்
Tsuen Wan District | |
---|---|
![]() வரைப்படத்தில் மாவட்டம் | |
அரசு | |
• மாவட்ட பணிப்பாளர் | (Mr CHAU How-chen, GBS, JP) |
பரப்பளவு | |
• மொத்தம் | 60.70 km2 (23.44 sq mi) |
மக்கள்தொகை (2006) | |
• மொத்தம் | 2,88,728 |
நேர வலயம் | ஒசநே+8 (ஹொங்கொங் நேரம்) |
இணையதளம் | சுன் வான் மாவட்டம் |
