சுபத்ரா குமாரி சவுஹான்
சுபத்ராகுமாரி சவுஹான் (Subhadra Kumari Chauhan) (16 ஏப்ரல் 1904[2][3] - 15 பிப்ரவரி 1948) ஓர் இந்தியக் கவிஞா், இந்தி மொழியில் பல கவிதைகளை இயற்றியவா். குறிப்பாக ஒன்பது ரசங்களில் ஒன்றான வீர ரசத்தில் பல கவிதைகள் எழுதிப் புகழ் பெற்றவா். இவருடைய புகழ் பெற்ற கவிதைகளில் ஒன்று “ஜான்சி கி ராணி” (ஜான்சி ராணியின் வீரத்தை குறித்தது) ஆகும்.[4]
சுபத்ரா குமாரி சவுஹான் सुभद्रा कुमारी चौहान | |
---|---|
பிறப்பு | அலஹாபாத், அவுத் ஆக்ரா ஒருங்கிணைந்த மாகாணம். United Provinces of Agra and Oudh, பிரித்தானிய இந்தியா | 16 ஆகத்து 1904
இறப்பு | 15 பெப்ரவரி 1948[1] சியோனி, பிராரும் மத்திய மாகாணமும், இந்தியா | (அகவை 43)
தொழில் | கவிஞர் |
தேசியம் | இந்தியர் |
காலம் | 1904-1948 |
வகை | கவி |
கருப்பொருள் | இந்தி மொழி, நாட்டு விடுதலை |
ஆரம்பகால வாழ்க்கை
தொகுஇவா் உத்திரப் பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் உள்ள நிகழ்பூா் என்னும் கிராமத்தில் பிறந்தவா். இவா் முதலில் அலகாபாத் நகரில் உள்ள கிராஸ்வெயிட் பெண்கள் பள்ளியில் படித்து 1919 ஆம் ஆண்டு இடைநிலைக் கல்வியில் தோ்ச்சி பெற்றாா். அதே ஆண்டு காந்வாவைச் சோ்ந்த தாக்குர் லட்சுமண சிங் சௌஹானைத் திருமணம் செய்தபின் ஜபல்பூரிற்கு குடிபெயா்ந்தாா்.[4] இவா்களுக்கு ஐந்து குழந்தைகள் இருந்தன.
வாழ்க்கை
தொகு1921 ஆம் ஆண்டு சுபத்ரா குமாரியும் இவரது கணவரும், காந்திஜி துவக்கிய ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்றனா். சுபத்ரா குமாரிதான் நாக்பூா் நகரில் விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்று சிறை சென்ற முதல் பெண்மணி ஆவாா். ஆங்கிலேயா்களை எதிா்த்து போராட்டத்தில் ஈடுபட்டு 1923 ஆம் ஆண்டும், 1942[5] ஆம் ஆண்டும் இருமுறைச் சிறைத் தண்டனை பெற்றுள்ளாா்.
இலக்கியப் பணி
தொகுசுபத்ராகுமாரி இந்தியில் பல கவிதைகளை இயற்றியுள்ளாா். ராணி லட்சுமிபாயின் வீரத்தைக் குறித்து உணா்ச்சிகரமாக எழுதப்பட்ட “ஜான்சி - கி - ராணி” என்னும் கவிதை இவரால் எழுதப்பட்டவைகளில் மிகவும் புகழ்பெற்ற ஒன்று. இந்தி இலக்கியத்தில் அதிகமாக வாசிக்கப்பட்டதும் பாடப்பட்டதுமான கவிதைகளில் இது தலையானது ஆகும். ஜான்சி ராணியின் வீர வாழ்க்கை வரலாற்றையும் 1857 சிப்பாய் கலகத்தில் ராணியின் பங்களிப்பையும் உணா்ச்சிகரமாக இப்படைப்பு சித்தரிக்கும். இவரது கவிதை பல இந்தியப் பள்ளிகளில் பாடமாக வைக்கப்பட்டிருந்தது[6].
இவரது கவிதையின் சில புகழ் பெற்ற சில வரிகள் பின்வருமாறு.
बुंदेले हरबोलों के मुँह हमने सुनी कहानी थी, खूब लड़ी मर्दानी वह तो झाँसी वाली रानी थी।।[7]
மொழிபெயா்ப்பு:
ஆணைப் போல எவ்வளவு வீரத்துடன் இவா் போரிட்டாா், ஏ ஜான்சி ராணியே, ஒவ்வொரு திட்டிலும் துப்பாக்கி, மழையைப் போல பொழியும் குண்டுகள், எவ்வளவு வீரத்துடன் ஆணைப் போல போராடியவா் ஜான்சிராணி, என்னே வீரம்!!
இவரது மற்ற கவிதைகளான “வீ ரோன் கா கைசா ஹோ பசந்த்”, ராக்கி கி சுநௌட்டி மற்றும் வீடா, விடுதலைப் போராட்டத்தைக் குறித்தவைகளாகும். இவரது இந்தக் கவிதைகள் பல இந்திய இளைஞா்களை விடுதலைப் போராட்டத்தில் ஈடுபடத் தூண்டியது. ஜான்சி கி ராணியின் முதல் பத்தி பின்வருமாறு
सिंहासन हिल उठे राजवंशों ने भृकुटी तानी थी,
बूढ़े भारत में भी आई फिर से नयी जवानी थी,
गुमी हुई आज़ादी की कीमत सबने पहचानी थी,
दूर फिरंगी को करने की सबने मन में ठानी थी।
चमक उठी सन सत्तावन में, वह तलवार पुरानी थी,
बुंदेले हरबोलों के मुँह हमने सुनी कहानी थी,
खूब लड़ी मर्दानी वह तो झाँसी वाली रानी थी।।
மொழிபெயா்ப்பு
தடைகள் தகா்க்கப்பட்டன, அரச குணங்கள் முகம் சுழிக்கவைக்கபட்டன, புதிய இளைஞா்களால் பழைய இந்தியா புதிய எழுச்சியுற்றது. இழந்த சுதந்திரத்தின் மதிப்பை மக்கள் உணா்ந்தனா். 1857 ஆம் ஆண்டு துருப்பிடித்த வாட்களுக்கு புது வடிவம் கிடைத்தது. அன்னியரைத் துரத்த அனைவரும் விழைந்தனா். காலமும் வந்தது. பந்தலின் நாடோடிப் பாடலைக் கேட்டோம். ஆணைப் போல் போரிட்டாள், அவளே ஜான்சியின் ராணி ஆவாள்.
சுபத்ரா குமாரி இந்தி மொழியில் காரிபோலி பேச்சு வழக்கில் மிக எளிய முறையில் பாமரருக்கும் புரியும் வண்ணம் எழுதிய கவிதைகள் எல்லோராலும் படிக்கப்பட்டு மிகவும் புகழடைந்தன. நடுத்தர வா்க்கத்தின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் ஒரு சில சிறுகதைகளையும் சுபத்ரா குமாரி எழுதியுள்ளாா்.
இறுதிமுடிவு
தொகு1948 ஆம் ஆண்டு நாகபுரியிலிருந்து ஜபல்புரிக்குத் மோட்டாா் வண்டியில் திரும்பிக் கொண்டிருக்கும் போது சியோனி என்னுமிடத்தில் விபத்தில் சுபத்ராகுமாரி மரணமடைந்தாா். சுபத்ராகுமாரி மராட்டிய மாநிலத்தில் சட்டப் பேரவையின் உறுப்பினராக இருந்தாா். சட்டப்பேரவைக் கூட்டத்தில் கலந்து கொண்டு திரும்பும் பொழுது இந்த விபத்து நடந்தது.
நினைவாக
தொகு- ஓர் இந்திய கடற்படைக் கப்பல் இவா் நினைவாக IGGS சுபத்ராகுமாரி சவுஹான் எனப் பெயரிடப்பட்டுள்ளது.
- மத்தியப் பிரதேச அரசு ஜபல்புரி நகரில் இவா் நினைவாக இவரின் சிலையை வைத்துள்ளது.
- 1976 ஆம் ஆண்டு ஆகஸ்டு 6 ஆம் நாள் இந்திய அஞ்சல் துறை இவரின் நினைவாக அஞ்சல் தலை வெளியிட்டுள்ளது
கவிதைகள்
தொகு- கிலோனிவாலா
- திரிதரா, பூரி தரவாசி சோடோ
- முகுல் (1930)
- யே கதம் கா பேடு
மிகவும் புகழ் பெற்ற “ஜான்சி கி ராணி”, “வீரோன் கா கைசா ஹோ பசந்த்”, “யே கதம் கா பேட்” போன்ற கவிதைகள் இந்தச் செய்யுள் திரட்டுகளின் ஒரு பகுதியாக இருந்தன.
- சிதே சாடே சித்ரா (1946)
- மேரா நயா பச்பன் (1946)
- பிகாரே போட்டி (1932) ஜான்சி கி ராணி
மேற்கோள்கள்
தொகு- ↑ "Biography of Subhadra Kumari Chauhan". https://allpoetry.com. All poetry. பார்க்கப்பட்ட நாள் 27 June 2017.
{{cite web}}
: External link in
(help)|website=
- ↑ http://www.oxforddnb.com/templates/article.jsp?articleid=97283
- ↑ http://www.bharatdarshan.co.nz/author-profile/47/subhadrakumari-chauhan.html
- ↑ 4.0 4.1 Rajaswi, M.I. (26 October 2016). Rashtrabhakt Kavyitri Subhadra Kumari Chauhan (Hindi) (1 ed.). New Delhi: Prabhat Prakashan. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-9384344375.
- ↑ "Biography of Subhadra Kumari Chauhan". www.bharatdarshan.co.nz. Bharat Darshan. பார்க்கப்பட்ட நாள் 27 June 2017.
- ↑ "Poems of Bundelkhand". www.bundelkhand.in. Bundelkhand.In. பார்க்கப்பட்ட நாள் 27 June 2017.
- ↑ Chauhan, Subhadra Kumari. "Jhansi ki rani". www.poemhunter.com. Poem hunter. பார்க்கப்பட்ட நாள் 27 June 2017.