சுபாசு பாலம்

இந்தியாவிலுள்ள பாலம்

சுபாசு பாலம் (Subhash Bridge) இந்தியாவின் குசராத்து மாநிலத்தில் பாயும் சபர்மதி ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ள ஒரு பாலமாகும். மகாத்மா காந்தியுடனான தொடர்புக்காக அகமதாபாத்தில் ஒரு முக்கியமான பகுதியாக இப்பாலம் கருதப்படுகிறது. காந்தி ஆசிரமம் சுபாசு பாலத்திலிருந்து 1.5 கி.மீ தூரத்தில் உள்ளது.

sஅபர்மதி ஆற்றின் முகப்பில் சுபாசு பாலம்
sஅபர்மதி ஆற்றின் முகப்பில் சுபாசு பாலம்

காந்தி ஆசிரம வர்த்தகப் பகுதி காதி வகை துணிகளுக்கான ஒரு களஞ்சியமாகும். சுபாசு பாலம் அகமதாபாத்தின் குடியிருப்பு பகுதியாக உள்ளது. இங்கு 80 எண்ணிக்கைக்கும் மேற்பட்ட குடியிருப்பு சங்கங்கள் உள்ளன. நகரின் மற்ற பகுதிகளிலிருந்து இப்பாலம் மேற்கில் ஒரு இரயில் பாதையாலும் கிழக்குப் பகுதியில் சபர்மதி நதியாலும் பிரிக்கப்பட்டுள்ளது. பாலத்தின் அருகில் கேசவ நகர் பகுதி அமைந்துள்ளது. 50 ஆண்டுகளுக்குப் பின்னர் 2019 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் சுபாசு பாலத்தில் இரண்டு கோடி ரூபாய் செலவில் பழுது பார்க்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. [1]

அணுகும் வழிகள்

தொகு

•அகமதாபத் நகர இரயில் நிலையத்திலிருந்து 7 கி.மீ தொலைவு.
•அகமதாபத் விமான நிலையத்திலிருந்து 16 கி.மீ.
•ஆசிரமம் சாலையும் டாக்டர் சின்னுபாய் படேல் சாலையும் சுபாசு பால இணைப்பு சாலைகள்.

மேற்கோள்கள்

தொகு
  1. Lua error in Module:Citation/CS1/Utilities at line 206: Called with an undefined error condition: err_numeric_names.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுபாசு_பாலம்&oldid=3043744" இலிருந்து மீள்விக்கப்பட்டது