சுபாவதி பசுவான்

சுபாவதி பசுவான் (Subhawati Paswan) என்பவர் சுபாவதி தேவி என்றும் அழைக்கப்படுகிறார். இவர் இந்திய அரசியல்வாதியும் பதினொராவது மக்களவையின் உறுப்பினரும் ஆவார். இவர் இந்திய நாடாளுமன்றத்தின் கீழ் அவையில் பான்சுகான் மக்களவைத் தொகுதியினை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.[1]

இளமை

தொகு

சுபாவதி உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூர் மாவட்டத்தில் உள்ள ஜிந்தாபூர் கிராமத்தில் 1952 மே 15 அன்று பிறந்தார்.[2]

தொழில்

தொகு

பான்ஸ்கான் தொகுதி பட்டியல் சாதி பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இத்தொகுதியில் சமாஜ்வாதி கட்சி வேட்பாளராக, சுபாவதி 1996 இந்திய பொதுத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் ராஜ் நரேன் பாசிக்கு எதிராக 2,03,591 வாக்குகள் பெற்றார். இவர் பாஜக வேட்பாளரைவிட 4.96% வாக்குகள் கூடுதலாகப் பெற்று வெற்றி பெற்றார்.[3] இருப்பினும், 1998 மற்றும் 1999 ஆண்டுகளில் நடைபெற்ற பொதுத் தேர்தல்களில், இவர் முறையே 31.67% மற்றும் 29.23% வாக்குகளைப் பெற்று, பாசியிடம் வெற்றி வாய்ப்பினை இழந்தார்.[4] 2004 தேர்தலில் 1,35,499 வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டார்.[5] இதற்கு அடுத்து நடைபெற்ற தேர்தல்களில் இவரது மகன் கமலேசு பசுவான் வெற்றி பெற்றார்.[6]

பசுவான் பாஜகவுக்கு மாறி 2012 உத்தரப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலில் பான்சுகான் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டார். இதே தொகுதியில் பாஜக தலைவர் யோகி ஆதித்யநாத் ஆதரவாளர் ஒருவர் போட்டியிட்டதால்[7] இவர் மூன்றாவது இடத்தைப் பிடித்தார். இவரால் 24,576 வாக்குகளை மட்டுமே பெற முடிந்தது.[8]

தனிப்பட்ட வாழ்க்கை

தொகு

சுபாவதி 10 ஏப்ரல் 1970-ல் ஓம் பிரகாசு பசுவானை மணந்தார்.[2] இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.[9]

மேற்கோள்கள்

தொகு
  1. Chandra, Kanchan (2016). Democratic Dynasties: State, Party and Family in Contemporary Indian Politics. Cambridge University Press. p. 183. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-107-12344-1.
  2. 2.0 2.1 "Members Bioprofile: Subhawati Paswan". Lok Sabha. பார்க்கப்பட்ட நாள் 6 November 2017.
  3. "Statistical Report on General Elections, 1996 to the Eleventh Lok Sabha" (PDF). Election Commission of India. p. 448. பார்க்கப்பட்ட நாள் 6 November 2017.
  4. "General Elections 2004 - Partywise Comparison for 33-Bansgaon Constituency of Uttar Pradesh". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 6 November 2017.
  5. "Statistical Report on General Elections, 2004 to the 14th Lok Sabha" (PDF). Election Commission of India. p. 314. பார்க்கப்பட்ட நாள் 6 November 2017.
  6. "Members Bioprofile: Paswan, Shri Kamlesh". Lok Sabha. பார்க்கப்பட்ட நாள் 6 November 2017.
  7. "Yogi in full flow: ‘justice for anything that’s anti-Hindu’". http://archive.indianexpress.com/news/yogi-in-full-flow--justice-for-anything-that-s-antihindu-/908301/. பார்த்த நாள்: 6 November 2017. 
  8. "Statistical Report on General Elections, 2012 to the Legislative Assembly of Uttar Pradesh" (PDF). Election Commission of India. p. 622. பார்க்கப்பட்ட நாள் 6 November 2017.
  9. "Subhawati Devi Affidavit". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 6 November 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுபாவதி_பசுவான்&oldid=3668763" இலிருந்து மீள்விக்கப்பட்டது