சுபியான் யுத்தம்

சுபியான் யுத்தம் (Battle of Sufiyan)[a] என்பது 6 நவம்பர் 1605 அன்று நடைபெற்ற ஒரு யுத்தமாகும். 1603-1618இல் உதுமானிய-சபாவித்து போரின் போது இது நடைபெற்றது. பேரரசர் அப்பாஸ் தலைமையிலான சபாவித்துக்கள் தங்களை விட எண்ணிக்கையில் அதிகமான, நன்றாக ஒருங்கிணைக்கப்பட்டிருந்த உதுமானிய இராணுவத்தை இந்த யுத்தத்தில் தோற்கடித்தனர்.[1][2] பேரரசர் அப்பாசின் பெரும் ராணுவ வெற்றிகளில் ஒன்றாக இது அமைந்தது[3]. காலின் இம்பர் என்ற வரலாற்றாளரின் கூற்றுப் படி: "உதுமானியர்கள் அங்கேரியில் அடைந்த தோல்விகளை விட சுபியான் யுத்தத்தின் தோல்வியானது மிகப் பெரிய அழிவாக இருந்தது".[4]

குறிப்புகள்

தொகு
  1. Also transliterated as "Sufian".

மேற்கோள்கள்

தொகு
  1. Blow 2009, ப. 81.
  2. Imber 2012, ப. 92.
  3. Blow 2009, ப. 173.
  4. Imber 2012, ப. 98.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுபியான்_யுத்தம்&oldid=3811265" இலிருந்து மீள்விக்கப்பட்டது