பேரரசர் அப்பாஸ்
பேரரசர் அப்பாஸ் அல்லது மகா அப்பாஸ் (Abbas the Great) என்பவர் ஈரானின் சபாவித்து அரசமரபின் ஐந்தாவது ஷா ஆவார். இவர் பொதுவாக ஈரானிய வரலாறு மற்றும் சபாவித்து அரசமரபின் ஆட்சியாளர்களில் மிகச் சிறந்தவர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். இவர் ஷா முகம்மது கோதபந்தாவின் மூன்றாவது மகன் ஆவார்.[3]
பேரரசர் அப்பாஸ் | |||||
---|---|---|---|---|---|
கடவுளின் நிழல்[1] | |||||
பெயர் தெரியாத இத்தாலிய ஓவியர் வரைந்த பேரரசர் அப்பாஸின் ஓவியம்[2] | |||||
ஈரானின் ஷா | |||||
ஆட்சிக்காலம் | 1 அக்டோபர் 1588 – 19 சனவரி 1629 | ||||
முடிசூட்டுதல் | 1588 | ||||
முன்னையவர் | முகம்மது கோதபந்தா | ||||
பின்னையவர் | சஃபி | ||||
பிறப்பு | 27 சனவரி 1571 ஹெறாத், சபாவித்து ஈரான் (தற்கால ஆப்கானித்தான்) | ||||
இறப்பு | 19 சனவரி 1629 (அகவை 57) மாசாந்தரான் மாகாணம், சபாவித்து ஈரான் | ||||
புதைத்த இடம் | ஷா முதலாம் அப்பாஸின் கல்லறை, கசான், ஈரான் | ||||
மனைவி |
| ||||
| |||||
அரசமரபு | சபாவித்து | ||||
தந்தை | முகம்மது கோதபந்தா | ||||
தாய் | கயிரல்னிசா பேகம் | ||||
மதம் | சியா இசுலாம் |
சபாவித்து ஈரானின் இராணுவ, அரசியல் மற்றும் பொருளாதார சக்தியின் மேற்பார்வையை அப்பாஸ் பெற்றாலும், நாட்டிற்கு மிகச் சிக்கலான காலத்தின்போது இவர் அரியணைக்கு வந்தார். இவரது தந்தையின் செயல்திறனற்ற ஆட்சிக்குக் கீழ், நாடானது கிசில்பாஷ் இராணுவத்தின் பல்வேறு பிரிவுகளுக்கு இடையே ஏற்பட்ட பிரச்சினைகளால் வலுவிழந்திருந்தது. இவருக்கு 8 வயதாக இருந்தபொழுது கிசில்பாஷ் இராணுவத்தினர் அப்பாஸின் தாய் மற்றும் அண்ணனைக் கொன்றனர். இது இவரது மனதில் ஆழமான பாதிப்பை ஏற்படுத்தியது. அதே நேரத்தில் ஈரானின் எதிரிகளான உதுமானியப் பேரரசு மற்றும் உசுப்பெக்கியர்கள் இந்த அரசியல் குழப்பத்தைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி நிலப்பரப்புகளை அபகரித்துக்கொண்டனர். 1588ஆம் ஆண்டு கிசில்பாஷ் தலைவர்களில் ஒருவரான முர்ஷித் கோலி கான் இராணுவப் புரட்சி செய்து ஷா முகமதுவைப் பதவியில் இருந்து தூக்கி எறிந்தார். 16 வயது அப்பாஸை அரியணையில் அமர வைத்தார். ஆனால் சீக்கிரமே அப்பாஸ் அரியாணையைத் தனக்காகக் கைப்பற்றிக்கொண்டார்.
பண்பு மற்றும் மரபு
தொகுஇவரைப் பற்றிய நூல்கள் இவர் தன்னுடைய பெரும்பாலான நேரத்தை மக்களிடையே கழித்தார் எனக் குறிப்பிடுகின்றன. தலை நகரமான இசுபகானில் இருந்த கடைவீதிகள் மற்றும் பிற பொது இடங்களுக்குத் தாமாகச் செல்வதை இவர் வழக்கமாகக் கொண்டிருந்தார்.[4] இவர் உயரத்தில் குள்ளமானவராக இருந்தார். ஆனால் உடல் வலு கொண்டவராக இருந்தார். இருந்தும் கடைசி ஆண்டுகளில் இவரது உடல் நலமானது பலவீனமானது. நீண்ட நேரத்திற்கு உறங்காமல் அல்லது உண்ணாமல் களிக்க அப்பாஸால் முடியும். தொலை தூரங்களுக்குக் குதிரை பயணம் செய்யும் திறமையும் அப்பாஸிடம் இருந்தது. 19ஆம் வயதில் இவர் தனது தாடியை எடுத்துவிட்டு, மீசையை மட்டும் வைத்துக் கொண்டார். இவ்வாறாக ஈரானில் இப்பாணியில் மீசை வைத்துக்கொள்ளும் பழக்கம் மக்களிடையே வேகமாகப் பரவத் தொடங்கியது.[5][6]
அப்பாஸ் ஒரு உளங்கவர் திறன் கொண்ட பேச்சாளர் ஆவார். தன்னுடைய பேச்சாற்றல் மூலம் மக்களின் மனதை மாற்றக்கூடியவராகவும், அவர்களின் எண்ணங்களில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவராகவும் திகழ்ந்தார். பாரம்பரியத் துருக்மெனியக் கவிஞரான மகுதைம்குலி, அப்பாஸுக்கு ஒரு நூற்றாண்டுக்குப் பிறகு வாழ்ந்தார். அவர் தனது "அணிகலன் அல்ல" என்ற கவிதையில் அப்பாஸைப் பற்றி பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்:[7]
- سخنور من ديان کوپدير جهانده
- هيچ کيم شاه عباس دک سخنور بولماز
- தாங்கள் சிறந்த பேச்சாளர்கள் என்று கூறிக்கொள்ளும் ஏராளமானவர்கள் உள்ளனர்,
- ஆனால் அவர்களில் ஒருவர் கூட ஷா அப்பாஸைப் போன்று ஆற்றல் பெற்றவர்கள் கிடையாது.
மேலும் காண்க
தொகுஉசாத்துணை
தொகு- ↑ Quinn 2015, chpt. Shah Abbas and political legitimacy'
- ↑ Amanat 2017, ப. 77.
- ↑ Thorne 1984, ப. 1
- ↑ Savory 1980, ப. 103
- ↑ Bomati & Nahavandi 1998, ப. 44–47
- ↑ Bomati & Nahavandi 1998, ப. 57–58
- ↑ Nūrmuhammed, Ashūrpūr (1997). Explanatory Dictionary of Magtymguly. Iran: Gonbad-e Qabous. p. 325. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 964-7836-29-5.
மேலும் படிக்க
தொகு- Yves Bomati and Houchang Nahavandi,Shah Abbas, Emperor of Persia,1587-1629, 2017, ed. Ketab Corporation, Los Angeles, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1595845672, English translation by Azizeh Azodi.
- Canby, Sheila R. (ed), 2009, Shah Abbas; The Remaking of Iran, 2009, British Museum Press, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780714124520
- Pearce, Francis Barrow (1920). Zanzibar, the Island Metropolis of Eastern Africa. New York, NY: E. P. Dutton and Company. LCCN 20008651. பார்க்கப்பட்ட நாள் 13 September 2014.
வெளி இணைப்புகள்
தொகு
- Shah Abbās: The Remaking of Iran, The British Museum, in association with Iran Heritage Foundation, 19 February – 14 June 2009,
- John Wilson, Iranian treasures bound for Britain, BBC Radio 4, 19 January 2009, BBC Radio 4's live magazine, Front Row (audio report).
- "Shah 'Abbas: The Remaking of Iran"