ஷா (பட்டம்)

ஷா (Shah, /ʃɑː/; பாரசீகம்: شاه) என்பது பேரரசர்கள், அரசர்கள், இளவரசர்கள் மற்றும் ஈரானின் (வரலாற்று ரீதியாக பாரசீகம்) பிரபுக்களுக்கு வழங்கப்பட்ட ஒரு பட்டம் ஆகும். ஷிர்வனின் (டிரான்ஸ்காக்கேசியாவின் ஈரானிய வரலாற்றுப் பகுதி) அரசர்களும் இப்பட்டத்தைப் பயன்படுத்தினர். அவர்கள் ஷிர்வன்ஷாக்கள் என்று அழைக்கப்பட்டனர். இப்பட்டத்தை உதுமானியப் பேரரசின் ஆட்சியாளர்கள் மற்றும் வழித்தோன்றல்கள், இந்தியத் துணைக் கண்டத்தின் முகலாயப் பேரரசர்கள், வங்காள சுல்தானகம்[1] மற்றும் ஆப்கானித்தான் நாட்டவரும் பயன்படுத்தினர். ஈரானில் (பாரசீகம் மற்றும் பெரிய பாரசீகம்) இப்பட்டம் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டது.

ஈரான், துருக்கி, காக்கேசியா, இந்தியத் துணைக் கண்டம், ஆப்கானித்தான் ஆகிய நாடுகளில் உயர் குடியினருக்கு வழங்கப்படுட்ட பட்டம்
Pahlavi Crown of Imperial Iran (heraldry).svg
பேரரசர்: படிஷா, ஷாஹன்ஷா
உயர்ந்த அரசன்: மகாராஜா
அரசன்: ராஜா, சுல்தான், ஷா, கான்
அரசுரிமை வாய்ந்த இளவரசன்: ஷாஜடா (செஹ்ஜடே), மிர்சா
உயர்குடி இளவரசன்: சாஹிப்ஜடா
உயர்குடி மனிதன்: நவாப், பயிக், பெக்ஜடா
அரசுரிமை வாய்ந்த வீடு: டமட்
அரசாங்கப் பதவி: லாலா, அகா, ஹஜினேடர்

மேற்கோள்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஷா_(பட்டம்)&oldid=2589160" இருந்து மீள்விக்கப்பட்டது