சுபோரெரின் விதி

சுபோரெரின் விதி (Spörer's law) சூரியச் சுழற்சியின் போது சூரியப்புள்ளிகளின் அட்சரேகை மாறுபாடுகளை கணிக்கிறது[1]. 1861 ஆம் ஆண்டில் ஆங்கிலேய வானியலாளர் ரிச்சர்டு கிரிசுடோபர் காரிங்டன் இதைக் கண்டறிந்தார்[2] . செருமன் வானியலாளர் குசுடாவ் சுபோரெர், காரிங்டனின் கண்டுபிடிப்பை மேலும் சீரமைத்தார்.

ஒரு சூரியப்புள்ளி சுழற்சி தொடங்கும்போது சூரியப்புள்ளிகள் சூரியனின் மேற்பரப்பில் 30° முதல் 45° அட்சத்தில் தோற்றம் பெற முனைகின்றன. தொடரும் சுழற்சிக் காலங்களில் இச்சூரியப் புள்ளிகள் மேலும் மேலும் தாழ்வான அட்சத்தில் தோற்றமளித்து சராசரியாக சூரிய அதிகப்பட்சத்தில் 15° அட்ச அளவை எட்டும் வரை குறைகிறது. இச்சராசரி அட்சரேகை அளவானது பின்னர் படிப்படியாக சுமார் 7° அட்சரேகை தோற்றம் வரை குறைந்து பழைய சூரியப்புள்ளிகள் மங்குகின்றன. புதிய சுழற்சியின் துவக்கமாக உயர் அட்சரேகை அளவுகளில் சூரியப்புள்ளிகள் மீண்டும் தோன்றுகின்றன.[3]

இணையாக சுபோரெர் விதி பண்பைக் காட்டும் பட்டாம்பூச்சி வரைபடம்.

மேற்கோள்கள்

தொகு
  1. Hopkins, Jeanne (1980). Glossary of astronomy and astrophysics. Chicago: University of Chicago Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-226-35171-8.
  2. Carrington, Richard Christopher (1863). Observations of the Spots on the Sun from November 9, 1853, to March 24, 1861, Made at Redhill. London: Williams and Norgate.
  3. Phillips, Kenneth J. H. (1992). Guide to the Sun. Cambridge: Cambridge University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-521-39788-X.

இவற்றையும் காண்க

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுபோரெரின்_விதி&oldid=4170654" இலிருந்து மீள்விக்கப்பட்டது