சுப்பிரமணியப் புலவர்
சுப்பிரமணியப் புலவர் ஒரு தமிழ்ப்புலவர். இவர் தன் பாடலில் பயன்படுத்தியுள்ள 'சலாம்', 'பராக்', 'ரவிக்கை' முதலான சொற்கள் இவரை 18 ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர் வாழ்ந்தவர் என்பதை வலியுறுத்துகின்றன.
இவர் தன் பாடலில் 'வடுகதுரை' என்னும் வெள்ளைக்காரத் துரையையும், அவனை ஏற்றுக்கொண்ட 'சிவசுப்பிரமணியராசன்' என்னும் அரசனையும் குறிப்பிட்டுள்ளார்.
இவரது பாடல் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் என்னும் யாப்பு வகையைச் சேர்ந்தது. அடிக்கு 28 சீர்கள் கொண்ட இந்தப் பாடலில் 72 சீர்கள் உள்ளன.
பெண் ஒருத்தியின் முலையை வருணித்துப் பாடும் இவரது பாடல் சிற்றிலக்கிய வகையில் ஒன்றான பயோதரப் பத்து வகையினைச் சேர்ந்ததாகலாம்.
மேற்கோள் நூல்
தொகு- தனிப்பாடல் திரட்டு நூல் பக்கம் 117 & 118