சுப்பிறீம் சட்-1

சுப்ரீம்சட்-1 அல்லது சைனாசட் 12 (SupremeSAT-I, ChinaSat 12 அல்லது Zhongxing 12/ZX 12)[3][4] சீனா நிறுவனமான சைனா கிறேட் வோல் இன்டச்ரீ கோப்பறேசன் மற்றும் இலங்கை நிறுவனம் சுப்ரீம்சட் ஆகியவற்றுக்குச் சொந்தமான தொடர்பாடல் செயற்கைக்கோள் ஆகும். இது சீனா, கிழக்காசியா, தெற்காசியா, மத்திய கிழக்கு, ஆப்பிரிக்கா, அவுஸ்த்திரேலியா, சீன கடற்பகுதி, இந்து சமுத்திரப் பிராந்தியம் ஆகியவற்றுக்கான தொடர்பாடல் சேவையினை வழங்க வல்லது. இது புவியிணக்கப்பாதை 87.5° கிழக்கில் அமையும். தலெஸ் அலெனியா ஸ்பேஸ் நிறுவனத்தினால் வடிவமைக்கப்பட்ட இது 15 வருட வாழ்நாட்களைக் கொண்டது. இது இலங்கையின் முதலாவது பகுதியாக உரிமைகொள்ளும் செயற்கைக்கோள் ஆகும். இதன் மூலம் இலங்கை செயற்கைக்கோள் உடைய 45வது நாடும், அதன் பிராந்தியத்தில் இந்தியா, பாக்கித்தானுக்கு அடுத்த மூன்றாவது நாடும் ஆகும்.[5]

சுப்ரீம்சட்-1
SupremeSAT-I/ChinaSat 12 (ZX 12)
சுப்ரீம்சட்-1 மாதிரி
முதன்மை ஒப்பந்தக்காரர்தலெஸ் அலெனியா ஸ்பேஸ்
உந்துவண்டிSpacebus-4000C2[1]
திட்ட வகைதொடர்பாடல் செயற்கைக்கோள்
ஏவப்பட்ட நாள்27 நவம்பர் 2012[2]
ஏவிய விறிசுLong March CZ-3B/E[3]
ஏவு தளம்சிசாங் செயற்கைக்கோள் செலுத்தி நிலையம்
திட்டக் காலம்15 வருடங்கள்
நிறை5054 கி.கி
திறன்2 பொருத்தக்கூடிய சூரியகல அடுக்குகள், மின்கலங்கள்
வான்வெளி கோளப்பாதைபுவியிணக்கப்பாதை
நெடுங்கோடு87.5°E
வாங்கியனுப்பி
வாங்கியனுப்பி28 C-band, 28 Ku-band
உள்ளடக்கப் பரப்புசீனா, கிழக்காசியா, தெற்காசியா, மத்திய கிழககு, ஆப்பிரிக்கா, அவுஸ்த்திரேலியா, சீன கடற்பகுதி, இந்து சமுத்திரப் பிராந்தியம்.

சுப்பிறீம் சட் இலங்கையின் முதலாவது செய்மதி செயற்படுத்தும் நிறுவனம் ஆகும்.[6] சுப்பிறீம் சட்-1 நவம்பர் 22, 2012 அன்று விண்ணுக்கு ஏவப்பட உத்தேசிக்கப்பட்டது. ஆனால் சீரற்ற காலநிலை மற்றும் தொழில்நுட்பக் காரணங்களால் நவம்பர் 27, 2012க்குப் பிற்போடப்பட்டது[7][8] இலங்கை மற்றும் சீன நாட்டுக் கொடிகளைத் தாங்கியதாக இது வலம்வர உள்ளது.

உசாத்துணை தொகு

  1. http://space.skyrocket.de
  2. "Sri Lanka launches its first communication satellite from China". Archived from the original on 2012-11-30. பார்க்கப்பட்ட நாள் 2012-11-28.
  3. 3.0 3.1 http://www.satbeams.com
  4. "Chinasat-12 ex-Apstar 7b footprints". Archived from the original on 2012-11-27. பார்க்கப்பட்ட நாள் 2012-11-22.
  5. "http://9ww.warunasat.com". Archived from the original on 2016-07-22. பார்க்கப்பட்ட நாள் 2012-11-22. {{cite web}}: External link in |title= (help)
  6. "SupremeSAT : About us". Archived from the original on 2012-10-28. பார்க்கப்பட்ட நாள் 2012-11-22.
  7. Launching Details
  8. "SupremeSAT news". Archived from the original on 2012-10-21. பார்க்கப்பட்ட நாள் 2012-11-22.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுப்பிறீம்_சட்-1&oldid=3479939" இலிருந்து மீள்விக்கப்பட்டது