சுமித்ரா சிங்
சுமித்ரா சிங் (Sumitra Singh-பிறப்பு 3 மே 1930) இந்தியாவின் இராசத்தான் மாநிலத்தைச் சேர்ந்த அரசியல்வாதி ஆவார். இவர் 12வது இராசத்தான் சட்டப் பேரவையின் சபாநாயகராக 2003-இல் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளராகப் போட்டியிட்டு சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றபோது, இராசத்தானில் சட்டமன்ற உறுப்பினராகப் பதவியை வகித்த முதல் பெண்மணி ஆனார். 1957 முதல் சனவரி 2009 வரை இந்தப் பதவியில் சிங் இருந்துள்ளார். சிங் இராசத்தான் சட்டப்பேரவைக்கு நடைபெற்ற பன்னிரண்டு சட்டமன்றத் தேர்தல்களில் ஒன்பது முறை (1957, 1962, 1967, 1972, 1977, 1985, 1990, 1998, 2003) சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதில் ஆறு முறை சுன்சுனூ தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]
சுமித்ரா சிங் | |
---|---|
இராசத்தான் சட்டமன்ற சபாநாயகர் | |
பதவியில் 2004-2009 | |
முன்னையவர் | பரசுராம் மடேர்னா |
பின்னவர் | தேப்பேந்திர சிங் சகாவாத் |
சட்டப் பேரவை உறுப்பினர் | |
தொகுதி | சுன்சுனூ |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 3 மே 1930 சுன்சுனூ, இராசத்தான் |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
குடும்பம்
தொகுசுமித்ரா சிங் சுன்சுன் மாவட்டத்தில் உள்ள கிசாரி கிராமத்தில் சிறீ லது ராம் கிசாரியின் சகோதரரின் குடும்பத்தில் 3 மே 1930-இல் பிறந்தார். லது ராம் கிசாரிக்கு மகன் இல்லாததால் இவரை மகளாக தத்தெடுத்து கொண்டார். சுமித்ரா பனசுதாலி வித்யாபீடத்தில் கல்வி கற்றார். இவர் இந்தி இலக்கியத்தில் முதுநிலை பட்டம் பெற்றுள்ளார். இவர் சூன் 2, 1952-இல் சுன்சூன் மாவட்டத்தில் உள்ள படுசாரி கிராமத்தைச் சேர்ந்த சிறீ நகர் சிங்குடன் திருமணம் செய்து கொண்டார். இந்த இணையருக்கு மூன்று மகன்கள் பிறந்தனர்.
விருதுகள்
தொகு- 2004:இந்திரா காந்தி பிரியதர்சினி விருது
- 2004: பாரத ஜோதி விருது
- 2006: புகழ் பெற்ற இந்தியா விருது