சுமித் ஆன்டில்

சுமித் ஆன்டில் (Sumit Antil) (பிறப்பு: 6 சூலை 1998) இந்தியாவின் ஈட்டி எறியும் தடகள வீரரும், இணை ஒலிம்பிக் விளையாட்டு வீரரும் ஆவார். இவர் 30 ஆகஸ்டு 2021 அன்று 2020 டோக்கியோ இணை ஒலிம்பிக் போட்டியில் ஈட்டி எறியும் (T64 பிரிவு) விளையாட்டில், 68.55 மீட்டர் தூரத்துக்கு ஈட்டி எறிந்து உலக சாதனை புரிந்து தங்கப்பதக்கம் வென்றார்.[2][3] [4] இவர் அரியானா மாநிலத்தில் உள்ள சோனிபத் அருகே கேவ்டா எனுமிடத்தில் பிறந்தவர்.[5]2015-இல் நடந்த மோட்டார் பைக் விபத்தில் இவர் தனது இடது கால் முட்டிக்கு கீழ் பகுதியை இழந்தார். கோஸ்போர்ட்ஸ் அறக்கட்டளை சுமித் ஆன்டிலுக்கு இணை ஒலிம்பிக் விளையாட்டிற்காக ஈட்டி எறியும் பயிற்சி வழங்கியது. [6]

சுமித் ஆன்டில்
219-இல் சுமித் ஆன்டில்
தனிநபர் தகவல்
பிறப்பு6 சூலை 1998 (1998-07-06) (அகவை 25)
விளையாட்டு
நாடுஇந்தியா
விளையாட்டுதடகள் வீரர், இணை ஒலிம்பிக் விளையாட்டு வீரர்
மாற்றுத்திறன் வகைப்பாடுT64
சாதனைகளும் விருதுகளும்
மாற்றுத் திறனாளர் இறுதி2020 டோக்கியோ
தனிப்பட்ட சாதனை(கள்)WR 68.55 m (2021)[1]

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "Tokyo Paralympics: Sumit Antil Wins Javelin (F64) Gold, Sets New World Record". sports.ndtv.com. பார்க்கப்பட்ட நாள் 30 August 2021.
  2. Sumit Antil clinches India's second gold in Paralympics
  3. "Athletics - Men's Javelin Throw - F64 Schedule | Tokyo 2020 Paralympics". .. (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 2021-08-30. பார்க்கப்பட்ட நாள் 2021-08-30.
  4. Tokyo Paralympics 2021 highlights: Sumit Antil wins gold, creates world record in javelin throw F64 event The Times of India. Retrieved 30 August 2021
  5. Vatchittagong. "Sumit Antil Paralympics 2021: Tokyo Olympic Gold Winner. - Vatchittagong" (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 2021-08-30. பார்க்கப்பட்ட நாள் 2021-08-30.
  6. Lua error in Module:Citation/CS1/Utilities at line 206: Called with an undefined error condition: err_numeric_names.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுமித்_ஆன்டில்&oldid=3555093" இலிருந்து மீள்விக்கப்பட்டது