சுமேலா குருமார் மடம்

சுமேலா குருமார் மடம் (Sumela Monastery, கிரேக்க மொழி: Μονή Παναγίας Σουμελά; துருக்கியம்: Sümela Manastırı) என்பது தியோட்டோக்கசுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு கிரேக்க மரபுசார் துறவிகள் மடம் ஆகும். சுமேலா என்றால் கிரேக்க மொழியில் "கறுப்பு மலை" என்று பொருள். இது இன்றைய துருக்கியில் பொண்டிக் மலைகளில் அமைந்துள்ளது.[2] உயரமான மிகவும் செங்குத்தான மலையில் 3900 அடி உயரத்தில் இந்த மடம் மலையைக் குடைந்து கட்டப்பட்டுள்ளது.

சுமேலா துறவிகள் மடம்
Sumela Monastery
அடிப்படைத் தகவல்கள்
அமைவிடம்மக்கா, டிராப்சன் மாகாணம், துருக்கி
புவியியல் ஆள்கூறுகள்40°41′24″N 39°39′30″E / 40.69000°N 39.65833°E / 40.69000; 39.65833
நிலைசிதையல்
செயற்பாட்டு நிலைசுற்றுலாப் பகுதி
பாரம்பரியகளமாக அறிவிக்கப்பட்டதுதற்காலிக யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளம்[1]
இணையத்
தளம்
www.sumela.gov.tr

வரலாறு

தொகு

கி.பி.386ஆம் ஆண்டில் ரோமானியப் பேரரசர் தியோடோசியஸ்(கி.பி.375-395)[3] என்பவரால் இந்த சுமேலா குருமார் மடம் கட்டப்பட்டது. புனித லூக்கா காலத்தில் வண்ணம் தீட்டப்பட்டது எனச் சொல்லப்படுகிறது.[4] இந்த மடம் பல காலங்கள் கவனிப்பாரின்றி பாழடைந்துவிட்டது. அவ்வப்போது பல மன்னர்கள் முயற்சி செய்தும் புதுப்பித்தும் உள்ளார்கள். கி.பி.13ஆம் நூற்றாண்டில் மன்னர் அலெக்ஸியஸ் ஆட்சியில் இந்த மடம் தற்போதுள்ள நிலைக்குக் கொண்டு வரப்பட்டது. 1365 ல் இந்த இடத்துக்கு மன்னர் தன்னாட்சி வழங்கினார். 1916-1918 ல் இந்த இடம் ரஷ்யாவின் ஆட்சிக்குள் வந்தது. 1930 ல் ஒரு தீ விபத்து இங்கு ஏற்பட்டது. அதில் உட்புறம் எரிந்து பாதிப்புக்குள்ளானது. பல கலைப்பொருட்கள் கொள்ளையர்களால் சூறையாடப்பட்டுள்ளது.

கட்டிட அமைப்பு

தொகு

மடத்தின் உட்புறத்தில் ஒரு தேவாலயம், பல வழிபாட்டுக் கூடங்கள், சமையல் அறைகள், மாணாக்கர் அறைகல், ஒரு நூலகம், நீரூற்று ஆகியவை உள்ளன. இந்த மடத்துக்கு முன்புறம் ஒரு பெரிய குளம் உள்ளது. மடத்தின் நீர் தேவைகளைப் பூர்த்தி செய்கிறது. தேவாலயத்தின் உட்புற வெளிப்புற சுவர்களில் வரையப்பட்ட வண்ண ஓவியங்கள் மிகவும் பழமை வாய்ந்தவை. அவை கிறித்துவ மற்றும் கன்னி மரியாவின் வரலாற்றைச் சித்தரிக்கின்றன.

காட்சியகம்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Sümela Monastery (The Monastery of Virgin Mary)". UNESCO. United Nations Educational, Scientific and Cultural Organization.
  2. William Miller, Trebizond: The last Greek Empire of the Byzantine Era: 1204-1461, 1926 (Chicago: Argonaut, 1969), p. 62
  3. Sümela Monastery (Archived from September 29, 2007). Republic of Turkey Ministry of Culture and Tourism.
  4. Miller, Trebizond, p. 61

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
சுமேலா மடம்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுமேலா_குருமார்_மடம்&oldid=3646619" இலிருந்து மீள்விக்கப்பட்டது