சுயம்வரம் (1972 திரைப்படம்)
சுயம்வரம் (One's Own Choice) (1972) ஆம் ஆண்டு வெளிவந்த மலையாள மொழித் திரைப்படமாகும். இத்திரைப்படமே அடூர் கோபாலகிருஷ்ணனின் முதற் திரைப்படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சுயம்வரம் | |
---|---|
இயக்கம் | அடூர் கோபாலகிருஷ்ணன் |
தயாரிப்பு | அடூர் கோபாலகிருஷ்ணன் |
கதை | அடூர் கோபாலகிருஷ்ணன் |
இசை | விஜய் பாஸ்கர் |
நடிப்பு | மது சாரதா திக்குரிசி சுகுமாரன் நாயர் |
ஒளிப்பதிவு | எம்.சி ரவி வர்மா |
படத்தொகுப்பு | எம்.மணி |
வெளியீடு | 1972 |
ஓட்டம் | 131 நிமிடங்கள் |
மொழி | மலையாளம் |
கதை
தொகுகதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.
எழுத்தாளராகத் திகழும் விஷ்வம் அவர் மனைவியான சீதாவுடன் குடித்தனம் நடத்துகின்றார். திடீரென ஏற்படும் பணப்பற்றாக்குறையினால் அவர்கள் வசதிகள் குறையப்பெற்ற பகுதிகளில் வாழவேண்டிய சூழல் ஏற்படுகின்றது. அச்சமயம் விஷ்வத்திற்கு மரத்தொழிற்சாலையில் வேலை கிடைக்கின்றது. மேலும் குழந்தையினைப் பெற்றெடுக்கும் சீதா நோய் வாய்ப்பட்டிருந்த கணவரைப் பலிகொடுக்கின்றார். இதன்பின்னர் விதவைக் கோலம் பூண்டிருக்கின்றார் சீதா.
விருதுகள்
தொகு1973 மாஸ்கோ சர்வதேச திரைப்படவிழா (ரஷ்யா)
- பரிந்துரைக்கப்பட்டது கோல்டன் விருது - அடூர் கோபாலகிருஷ்ணன்
1973 சிறந்த திரைப்படத்திற்கான தேசிய திரைப்பட விருது (இந்தியா)
- வென்ற விருது - கோல்டன் லோட்டஸ் விருது - சிறந்த திரைப்படம்
- வென்ற விருது - கோல்டன் லோட்டஸ் விருது - சிறந்த இயக்குநர்
- வென்ற விருது - சில்வர் லோட்டஸ் விருது - சிறந்த நடிகை - சாரதா
- வென்ற விருது - சில்வர் லோட்டஸ் விருது - சிறந்த ஒளிப்பதிவு - எம்.சி ரவி வர்மா