சுய ஊனம்
ஒரு விலங்கு உடல் உறுப்புகளை உதிர்க்கும் தற்காப்பு நடத்தை
தற்பிரிவு (Autotomy) அல்லது சுய ஊனம் என்பது ஒரு விலங்கு தன்னைத் தானே ஊனத்துக்கு உள்ளாக்கும் ஒரு செயலாகும்.[1] பல்லி போன்ற உயிரினங்கள் தனது வால் பகுதியை எதிரியின் கவனத்தை திசைத் திருப்பும்வகையில் தானே துண்டித்து எதிரியை குழம்பவைத்து தப்பிப்பது ஒரு எடுத்துக்காட்டாகும். பல்லியின் வால் பகுதியிலுள்ள வால் முள்ளெலும்பு கடினப்படாத பகுதியாக உள்ளது. இது எளிதில் துண்டாகி விழுந்து விடும். துண்டாகி வால் துடிப்பதையே எதிாி உயிாி பாா்த்துக் கொண்டிருக்க பல்லி தப்பித்துக் கொள்ளும். பல்லிபோன்ற சில விலங்குகள் இழந்த உடல் பகுதியை மீண்டும் மீளாக்கத்தால் உருவாக்கும் திறன் கொண்டவையாக உள்ளன. பல்லியின் வெட்டப்பட்ட வால் மீண்டும் வளா்ச்சி பெறும். என்றாலும் இந்த வாலின் அமைப்பு முந்தைய உண்மையான வாலைப் போல் இருக்காது.[2]