சுரங்கா உதாரி

சுரங்கா உதாரி (Suranga Udari) இலங்கையைச் சேர்ந்த கணினி வரைகலைஞர் ஆவார். பத்திரிகையாளர், செய்தி நிருபர் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர் என பன்முகங்களுடன் இயங்கி வருகிறார். இலங்கையின் முதல் பெண் காது கேளாத பத்திரிகையாளராக பரவலாகவும் அறியப்படுகிறார். [1] [2]

சுரங்கா உதாரி
Suranga Udari
தேசியம்சிறீலங்கன்
கல்விசிறீ சாரிபுத்ரா மகா வித்யாலயா, அகங்காமா
பணிவரைகலை வடிவமைப்பாளர், பத்திரிகையாளர், செய்தியாளர், சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்
அறியப்படுவதுமுதல் இலங்கை சைகைமொழி செய்தியாளர்

சுயசரிதை தொகு

ஐந்து குழந்தைகளைக் கொண்ட குடும்பத்தில் சுரங்கா பிறந்தார். இவரது இரண்டு உடன்பிறப்புகள் காது கேளாமைடன் பிறந்ததாகக் கூறப்படுகிறது. இவர் ஆரம்ப மற்றும் இடைநிலைக் கல்வியை சாதாரண நிலையில் கல்வி கற்றார். இலங்கையின் தெற்கு மாகாணம் அகங்காமாவிலுள்ள சிறீ சாரிபுத்திரா மகா வித்யாலயா பள்ளியில் படித்தார். சுரங்கா அகங்காமாவில் வசிக்கிறார். [3]

தொழில் தொகு

உதாரி ஆரம்பத்தில் சுரங்கா உதாரி கணினி வரைகலைஞராக தனது வாழ்க்கையைத் தொடர்ந்தார். லேக் அவுசில் கணினி மென்பொருளில் பட்டயம் பெற்றார். சுமார் எட்டு ஆண்டுகள் ஒரு தனியார் நிறுவனத்தில் வரைகலை கலைஞராக பணிபுரிந்தார. மேலும் கோவிட் -19 தொற்றுநோயின் தாக்கத்தால் இவர் வேலையில் இருந்து நீக்கப்பட்டார்.[4] வரைகலை வடிவமைப்பு வேலையில் இருந்து நீக்கப்பட்ட பிறகு சுரங்கா பத்திரிகை துறையில் ஆர்வம் காட்டினார். கேட்கும் திறன் குறைபாடு காரணமாக இலங்கையில் உள்ள அனைத்து முக்கிய ஊடக நிறுவனங்களும் வேலை வாய்ப்பை வழங்க மறுத்ததால், ஊடகத் துறையில் பொருத்தமான வேலை வாய்ப்புகளைக் காண அவர் தடைகளையும் எதிர்கொண்டார். [4]

இலங்கை மத்திய காது கேளாதோர் கூட்டமைப்பில் ஓர் ஊழியராக பணியாற்றுகிறார் இலங்கை காது கேளாதோர் பெண்கள் சங்கத்தின் உதவி செயலாளராகவும் இவர் பணியாற்றுகிறார். [2]

2020 ஆம் ஆண்டில் செப்டம்பர் மாதத்தில் உதாரி இலங்கை மத்திய காது கேளாதோர் கூட்டமைப்பில் ஊழியர்களாக பணிபுரியும் சக ஊழியர்களால் "துடிப்பான குரல்கள்" திட்டத்தில் பங்கேற்பாளராக பரிந்துரைக்கப்பட்டார். "துடிப்பான குரல்கள்" திட்டத்தின் கீழ் இலங்கை மேம்பாட்டு பத்திரிகையாளர் மன்றத்தில் ஐந்து நாள் குடியிருப்பு பயிற்சி முகாமில் பயிற்சியும் பெற்றார். [2]

"துடிப்பான குரல்கள்" திட்டத்தின் கீழ், காலி மாவட்டம் , இக்கதுவாவில் முறையற்ற முறையில் முகமூடிகளை அகற்றுவதால் ஏற்படும் சுற்றுச்சூழல் பிரச்சினைகள் மற்றும் அழிவு குறித்து ஒரு பத்திரிகையாளராக தனது முதல் நிகழ்ச்சியை இவர் அறிவித்தார். [5] முகமூடிகளை அகற்றுவதன் தாக்கம் பற்றிய இவரது செய்தி அறிக்கை சனவரி 2021 இல் மீடியா கார்ப்சு வாட்ச் மூலம் வெளியிடப்பட்டது, இது இலங்கை மேம்பாட்டு பத்திரிகையாளர் மன்றத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட வாராந்திர செய்தித் திட்டமாகும். [2] 1 சனவரி 2021 அன்று புத்தாண்டுடன் இணைந்து, இவர் இலங்கையில் முதல் பெண் காது கேளாத செய்தி நிருபராக அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டார். [6]

சைகை மொழி மற்றும் அலைபேசி பத்திரிகை நுட்பங்களைப் பயன்படுத்தி முகமூடிகளால் ஏற்படும் சுற்றுச்சூழல் பிரச்சினைகளைப் புகாரளிப்பதில் இவர் பிரபலமானார். இது சுரங்காவின் வாழ்நாளில் ஒரு மைல்கல்லாக அமைந்தது. இலங்கையில் உள்ள காது கேளாத சமூகத்திற்கு நம்பிக்கையின் ஒரு கலங்கரை விளக்கத்தைக் கொண்டு வந்து, ஊடகங்களில் உள்ளடக்கிய கலாச்சாரத்திற்கு வழி வகுத்து, அவர்களுக்கு ஒரு புதிய அலை வாய்ப்புகளை முன்னோடியாக மாற்றியுள்ளது. மீடியோகார்ப்சு வாட்சில் வெளியிடப்பட்ட தனது முதல் செய்தி அறிக்கையைத் தொடர்ந்து சிராசி தொலைக்காட்சியில் இருந்து உதாரி வேலை வாய்ப்பையும் பெற்றார். [1]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 USAID (2021-04-05). "A Sri Lankan Woman Turns Her Disability into a Silver Bullet". Medium (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-05-19.USAID (2021-04-05). "A Sri Lankan Woman Turns Her Disability into a Silver Bullet". Medium. Retrieved 2021-05-19.
  2. 2.0 2.1 2.2 2.3 "Suranga Udari Recorded as the First Female Sign Language Reporter in Sri Lanka - Sri Lanka Development Journalists Forum". ldjf.org. பார்க்கப்பட்ட நாள் 2021-05-19."Suranga Udari Recorded as the First Female Sign Language Reporter in Sri Lanka - Sri Lanka Development Journalists Forum". ldjf.org. Retrieved 2021-05-19.
  3. Nadeera, Dilshan. "Lanka's first sign language journo makes her debut with report on pollution in Galle" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-05-19.
  4. 4.0 4.1 "The inspiring story of Suranga Udari". The Morning - Sri Lanka News (in அமெரிக்க ஆங்கிலம்). 2021-01-12. Archived from the original on 2021-05-19. பார்க்கப்பட்ட நாள் 2021-05-19.
  5. First Female Sign language reporter | Sri Lanka (in ஆங்கிலம்), பார்க்கப்பட்ட நாள் 2021-05-19
  6. "Sri Lanka's first-ever sign language journalist makes her debut | Daily FT". www.ft.lk (in English). பார்க்கப்பட்ட நாள் 2021-05-19.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)

 

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுரங்கா_உதாரி&oldid=3623909" இலிருந்து மீள்விக்கப்பட்டது