சுரம் நீக்கும் பரமன்

சிவ வடிவங்களில் ஒன்றான
சுரம் நீக்கும் பரமன்
மூர்த்த வகை:
64 சிவவடிவங்கள்
விளக்கம்: வேடுவக் கோலம்
இடம்: கைலாயம்
வாகனம்: நந்தி தேவர்

சுரம் நீக்கும் பரமன் என்பவர் சிவபெருமானின் அறுபத்து மூன்று வடிவங்களில் ஒருவராவார். இவர் மூன்று தலைகளையும், நான்கு கைகளையும், ஒன்பது விழிகளையும், மூன்று கால்களையும் உடைவர். [1] இவரை ஜ்வாரபக்ன மூர்த்தி என வடமொழியில் அழைக்கின்றனர்.

திருவுருவக் காரணம்

தொகு

சிவபக்தியில் சிறந்தவனாக விளங்கிய வாணாசுரன், மாபலி மன்னனின் மகனாவார். இவர் சிவபெருமானிடம் தன்னுடைய அரண்மனையில் குடும்பத்துடன் வசிக்கும் படி வேண்டினார். வாணாசுரனின் சிவபக்தியால் சிவபெருமானும் பார்வதி மற்றும் சிவக்குமாரர்களான கணபதி மற்றும் முருகன் ஆகியோருடன் தங்கினார்.

சிவனருளால் அனைவரையும் வென்ற வாணாசுரனுடன் கண்ணனாக பிறந்த திருமால் போர்புரிய வந்தார். அப்பொழுது கண்ணனுடன் போர்புரிய சிவபெருமான் எடுத்த உருவமே ஜ்வாரபக்ன மூர்த்தியாகும்.

இவற்றையும் காண்க

தொகு

மேற்கோள்களும் குறிப்புகளும்

தொகு
  1. http://temple.dinamalar.com/news_detail.php?id=808 சிவவடிவங்கள் ஜ்வாரபக்ன மூர்த்தி - தினமலர் கோயில்கள்

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுரம்_நீக்கும்_பரமன்&oldid=2128450" இலிருந்து மீள்விக்கப்பட்டது