சுருதிசார விளக்கம்
சுருதிசார விளக்கம் என்னும் நூல் சிவஞான வள்ளல் என்பவர் இயற்றிய 20 நூல்களில் ஒன்று. இது 91 விருத்தப் பாடல்களைக் கொண்ட நூல்.
- இந்த நூலின் காலம் 15ஆம் நூற்றாண்டு.
சுருதி என்பது வேதம். வேதத்தில் மகாவாக்கியங்கள் நான்கு. இந்த நான்கின் பொருளை விளக்குவது இந்த நூல். திருமூலர், சடகோபர், சிவாக்கர் (சிவ வாக்கியார்), வெண்காடர், சுயம்பிரகாசர் ஆகியோரை வணங்கியபின் நூல் விரிகிறது. சுகமுனிவன் தன் ஐயங்களை பிரமன், சனகன் ஆகியோரிடம் வினவுவதாகவும், அவர்கள் விளக்கம் சொல்வதாகவும் நூல் அமைந்துள்ளது.
கருவிநூல்
தொகு- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினைந்தாம் நூற்றாண்டு, 2005