சுருதி குரியன்

இந்திய இறகுப் பந்தாட்ட வீராங்கனை

சுருதி குரியன் (Shruti Kurien) (பிறப்பு: மார்ச் 28,1983) ஓர் இந்திய இறகுப்பந்தாட்ட வீராங்கனை ஆவார்.[1] இவர் தனது கூட்டாளியான ஜுவாலா குட்டாவுடன் இணைந்து 2000 மற்றும் 2002-2008 இல் தேசிய மகளிர் இரட்டையர் கோப்பையை வென்றார். 2004, 2006 மற்றும் 2010 தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் பெண்கள் இரட்டையர் மற்றும் குழு நிகழ்வுகளில் தங்கப் பதக்கம் வென்ற இவர், 2006 பொதுநலவாய விளையாட்டுகளில் கலப்பு அணிக்கான வெண்கலத்தையும் வென்றார். 2008இல் பல்கேரியாவில் நடந்த பெண்கள் இரட்டையர் போடியில் பட்டத்தை குரியன் வென்றார். இவர் மகாராட்டிராவைச் சேர்ந்த மற்றொரு தேசிய இறகுப்பந்தாட்ட வீரரான நிகில் கனேட்கர் என்பவரை மணந்தார். இருப்பினும் இருவரும் இப்போது விவாகரத்து செய்துள்ளனர்.[2]

சுருதி குரியன்
Shruti Kurien
நேர்முக விவரம்
நாடுஇந்தியா
பிறப்பு28 மார்ச்சு 1983 (1983-03-28) (அகவை 41)
சென்னை, இந்தியா
உயரம்1.70 மீ
கரம்வலது கை
மகளிர் கலப்பு ஆட்டம்
பெரும தரவரிசையிடம்26 (WD 1 ஜூலை 2010)
62 (XD 14 ஜனவரி 2010)
பதக்கத் தகவல்கள்
மகளிருக்கான இறகுப்பந்தாட்டம்
நாடு  இந்தியா
பொதுநலவாய விளையாட்டுகள்
வெண்கலப் பதக்கம் - மூன்றாமிடம் 2006, மெல்போர்ன் கலப்பு குழு ஆட்டம்
தெற்காசிய விளையாட்டுகள்
தங்கப் பதக்கம் – முதலிடம் 2004, இசுலாமாபாத் மகளிர் இரட்டையர்
தங்கப் பதக்கம் – முதலிடம் 2004, இசுலாமாபாத் மகளிர் குழு
தங்கப் பதக்கம் – முதலிடம் 2006 கொழும்பு மகளிர் இரட்டையர்
தங்கப் பதக்கம் – முதலிடம் 2006 கொழும்பு மகளிர் குழு
தங்கப் பதக்கம் – முதலிடம் 2010 டாக்கா மகளிர் இரட்டையர்
தங்கப் பதக்கம் – முதலிடம் 2010 டாக்கா மகளிர் குழு
இ. உ. கூ. சுயவிவரம்

மேற்கோள்கள்

தொகு
  1. "Shruti Kurien". Badminton Association of India. Archived from the original on 10 September 2011.
  2. "Indian badminton stars Nikhil Kanetkar and Shruti Kurien are all smiles during their marriage". தி இந்து. 28 August 2006 இம் மூலத்தில் இருந்து 29 September 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110929071647/http://www.thehinduimages.com/hindu/photoDetail.do?photoId=9109564. பார்த்த நாள்: 6 February 2010. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுருதி_குரியன்&oldid=4103290" இலிருந்து மீள்விக்கப்பட்டது