சுருள்வில் திரியியக்கம்
சுருள்வில் திரியியக்கம் என்பது, முற்கால சுடுகலனை சுடுவதற்கு பயன்படுத்தப்பட்ட திரி இயங்குநுட்பத்தின் ஒரு வகை ஆகும். இது ஐரோப்பாவில் 1475 முதல் 1640 வரையிலும், ஜப்பானில் 1543 முதல் 1880 வரை பயன்படுத்தப்பட்டது.[1]
விரிவுரை
தொகுஅரவு (முனையில் பிடிப்பிரும்பு கொண்ட ஒரு வளைந்த நெம்புகோல்) சுடும் நிலையில், ஒரு வலுவற்ற சுருள்வில்லால் பிடித்து வைக்கப்பட்டிருக்கும்;[2] ஓர் பொத்தானை அழுத்துதல், விசையை இழுத்தல், அல்லது இயக்கத்திற்கு இடையே உள்ள சிறு கம்பியை இழுப்பதன் மூலமாகக்கூட, இந்த சுருள்வில் விடுவிக்கப்படலாம். இதனால், பற்றிரும்பு கீழே சாய்ந்து, கனந்துகொண்டிருக்கும் திரியை தாழ்த்தி, கிண்ணியில் உள்ள எரியூட்டும் துகளுக்கு தீமூட்டும். எரியூட்டியில் இருக்கும் தீ, தொடு துளை வழியாக துமுக்கிக் குழலுள் உள்ள முதன்மை உந்துபொருளை அடையும். கிண்ணியில் திரி வேகமாக மோதுவதால் அடிக்கடி அணைந்துவிடும், இதனால், வீரர்களால் இது விரும்பப்படவில்லை. ஆனால் குறிப்பிட்ட இலக்கை தாக்க இது அடிக்கடி உபயோகப்பட்டது.
ஜப்பானில், முதலில் ஆவணப்படுத்தப்பட்ட (டனேகசிமா என்றழைக்கப்பட்ட) திரியியக்கியின் அறிமுகம் 1543-ல், போர்ச்சுகீசியர்களால் வந்தது.[3] சுருள்வில் திரியியக்கிகளை அடிப்படையாகக் கொண்டு டனேகசிமா, போர்ச்சுகீசிய இந்தியாவில் இருந்த கோவாவின் ஆயுதக்கிடங்கில் தயாரிக்கப்பட்டது. 1510-ல் போர்ச்சுகீசியர்கள் கோவாவை கைப்பற்றினர்.[4]
மேலும் பார்க்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ The defences of Macau: forts, ships and weapons over 450 yearsAuthor Richard J. Garrett, Publisher Hong Kong University Press, 2010, ISBN 9888028499,9789888028498 P.176
- ↑ European & American arms, c. 1100–1850, Author Claude Blair, Publisher B. T. Batsford, 1962, Original from Pennsylvania State University, Digitized Jun 30, 2009 P.42
- ↑ Tanegashima: the arrival of Europe in Japan, Olof G. Lidin, Nordic Institute of Asian Studies, NIAS Press, 2002 P.1-14
- ↑ The bewitched gun : the introduction of the firearm in the Far East by the Portuguese, by Rainer Daehnhardt 1994 P.26