சுரேந்திர மோதிலால் பட்டேல்
இந்திய அரசியல்வாதி
சுரேந்திர மோதிலால் பட்டேல் (Surendra Motilal Patel)(பிறப்பு: திசம்பர் 11, 1937 கடா, தா-சோஜித்ரா) பாரதிய ஜனதா கட்சியினைச் சார்ந்த இந்திய அரசியல்வாதி மற்றும் நாடாளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவின் குஜராத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார். இவர் ஆகத்து 2005 முதல் ஆகத்து 2011 வரை பதவியிலிருந்தார்.[1]
பட்டேல் பொறியியல் பட்டதாரி ஆவார்.[2] இவர் சாங்காவில் உள்ள சரோதர் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் (மாநில பல்கலைக்கழக சட்டத்தின் கீழ் மாநில தனியார் பல்கலைக்கழகம், 2009) தலைவராக உள்ளார். இவரது நாடாளுமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதியானது கிராமப்புறங்களில் பள்ளிகளின் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக ஒதுக்கப்படுகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ https://prsindia.org/mptrack/rajya-sabha/surendramotilalpatel
- ↑ "Shri Patel Surendra Motilal(Bharatiya Janata Party(BJP)):(GUJARAT) - Affidavit Information of Candidate:". myneta.info. பார்க்கப்பட்ட நாள் 2022-12-03.
வெளி இணைப்புகள்
தொகு- ராஜ்யசபா இணையதளத்தில் சுயவிவரம் பரணிடப்பட்டது 2007-09-30 at the வந்தவழி இயந்திரம்